Asianet News TamilAsianet News Tamil

54வது கேரள மாநில திரைப்பட விருதுகள் அறிவிப்பு : 9 விருதுகளை தட்டிதூக்கிய ஆடுஜீவிதம் - முழு வின்னர் லிஸ்ட் இதோ

54வது கேரள மாநில திரைப்பட விருதுகளில் ஆடுஜீவிதம் படத்தில் நடித்த ப்ரித்விராஜ் சுகுமாரன்  சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.

54th Kerala State Film Awards prithviraj sukumaran aadujeevitham bags 9 awards gan
Author
First Published Aug 16, 2024, 1:30 PM IST | Last Updated Aug 16, 2024, 1:33 PM IST

54வது கேரள மாநில திரைப்பட விருதுகள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) கேரள கலாச்சார விவகார அமைச்சர் சாஜி செரியன் அவர்களால் அறிவிக்கப்பட்டது. 'ஆடுஜீவிதம்: தி கோட் லைஃப்' படத்தில் நடித்ததற்காக ப்ரித்விராஜ் சுகுமாரன் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார், அதே நேரத்தில் 'Ullozhukku' படத்திற்காக ஊர்வசியும், 'தடவு' படத்திற்காக பினா ஆர் சந்திரனும் சிறந்த நடிகைக்கான விருதை வென்றனர். 'ஆடுஜீவிதம்: தி கோட் லைஃப்' படத்திற்காக பிளஸ்ஸி சிறந்த இயக்குனருக்கான விருதையும், 'காதல்: தி கோர்' சிறந்த திரைப்பட விருதையும் வென்றது. இந்த ஆண்டு மாநில விருதுகளில் ஆடுஜீவிதம் திரைப்படம் 9 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.

இதையும் படியுங்கள் : படம் அட்டர் பிளாப்... ஆனாலும் தயாரிப்பாளர் ஹாப்பி! 10 மடங்கு லாபம் ஈட்டி தந்த இளையராஜாவின் ஒரே பாட்டு

காதல்: தி கோர் மற்றும் கண்ணூர் ஸ்குவாட் ஆகிய படங்களில் நடித்ததற்காக, முந்தைய பதிப்பில் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்ட புகழ்பெற்ற நடிகர் மம்மூட்டியுடன் ப்ரித்விராஜ் கடுமையான போட்டியை எதிர்கொண்டார். சிறந்த திரைப்பட விருதுக்கான போட்டி 2018, ஆடுஜீவிதம், ஃபேமிலி மற்றும் காதல்: தி கோர் ஆகிய படங்களுக்கு இடையே இருந்தது.

மற்ற விருதுகள்

சிறந்த நடிகருக்கான ஜூரி விருது - கே. ஆர். கோகுல் (ஆடுஜீவிதம்), சுதி கோழிக்கோடு (காதல்)
சிறந்த படத்துக்கான ஜூரி விருது - ககனாச்சாரி
சிறந்த அறிமுக இயக்குனர் - பாசில் ரசாக் (தடவு)
பிரபலமான படம் - ஆடுஜீவிதம்
நடன இயக்குனர் - விஷ்ணு (சுலைகா மன்சில்)
சிறந்த பெண் டப்பிங் கலைஞர் - சுமங்கலா (ஜனம் 1947 - பிரணயம் துடருன்னு)
சிறந்த ஆண் டப்பிங் கலைஞர் - ரோஷன் மேத்யூ (Ullozhukku), சிறந்த ஒப்பனை கலைஞர் - ரஞ்சித் அம்பாடி (ஆடுஜீவிதம்)
ஒலி வடிவமைப்பு - ஜெயதேவ் சக்கடத், அனில் ராதாகிருஷ்ணன் (Ullozhukku)
ஒலி கலவை - ரசூல் பூக்குட்டி, சரத் மோகன் (ஆடுஜீவிதம்)
Sync சவுண்ட் - ஷமீர் அகமது (ஓ பேபி)
கலை இயக்கம் - மோகன்தாஸ் (2018)
எடிட்டிங் - சங்கீதா பிரதாப் (லிட்டில் மிஸ் ராவ்)

இயக்குனர் சுதீர் மிஸ்ரா தலைமையில் மாநில திரைப்பட விருதுகள் ஜூரி அமைக்கப்பட்டது, இயக்குனர் பிரியானந்தனன் மற்றும் ஒளிப்பதிவாளர் அழகப்பன் ஆகியோர் முதன்மை ஜூரி தலைவர்களாக இருந்தனர். இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி மற்றும் எழுத்தாளர் என்.எஸ். மாதவன் ஆகியோர் ஜூரி உறுப்பினர்களாக உள்ளனர்.

மாநில திரைப்பட விருதுகளுக்கான திரையிடல் இரண்டு சுற்றுகளாக நடைபெற்றது. முதல் சுற்றில் 160 படங்கள் பரிசீலிக்கப்பட்டன, பின்னர் இறுதிச் சுற்றில் 40க்கும் குறைவான படங்களாகக் குறைக்கப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படங்களும் விருதுகளுக்கு பரிசீலிக்கப்பட்டன.

சமீபத்தில், நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடித்ததற்காக மம்மூட்டி சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றார், லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய இப்படத்தில், மம்மூட்டி ஜேம்ஸ் மற்றும் சுந்தரம் என மலையாளம் மற்றும் தமிழில் பேசும் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: ஒரே ஒரு பொய்! நடிகை மீனாட்சியை திட்டம் போட்டு தீர்த்து கட்டிய நண்பர்கள்! பதற வைக்கும் Flash Back!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios