3டி வெர்ஷனின் வெளியாகும் கமல்ஹாசனின் 'ஆளவந்தான்'..!

நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான 'ஆளவந்தான்' திரைப்படம் விரைவில் 3டி பதிப்பில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

3D version of Kamal Haasan  aalavanthan movie will be released soon

உலக நாயகன் என்கிற தன்னுடைய பட்டத்திற்கு ஏற்ப, உலக தரமான படங்களை ரசிகர்களுக்கு விருந்தாக்கி வருபவர் கமல்ஹாசன். அந்த வகையில், கமல் இரட்டை வேடங்களில் நடித்து கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான 'ஆளவந்தான்' படத்தில் தன்னுடைய உடலை ஏற்றி, மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார். இந்த திரைப்படம் 1984 ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் எழுதிய 'தாயம்' என்கிற நாவலை தழுவி எடுக்கப்பட்டிருந்தது.

கமல்ஹாசன் கதை, திரைக்கதை, அமைக்க இந்த படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். கமல்ஹாசனின் தனித்துவமான திரைக்கதையை இந்த படத்தின் ஒவ்வொரு காட்சிகளில் உணர முடியும். இப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் ரீதியாக வெற்றி பெற்றது மட்டும் இன்றி, வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்திற்கு ஸ்பெஷல் எஃபெக்ட் செய்த அபய் சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்டுக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.

மேலும் செய்திகள்: 'பொன்னியின் செல்வன்' பட வாய்ப்பை நிராகரித்த விஜய் உட்பட 9 பிரபலங்கள்..! யார் யார் தெரியுமா?
 

3D version of Kamal Haasan  aalavanthan movie will be released soon

இந்நிலையில் இந்த படத்தை 3டி டிஜிட்டல் வெர்ஷனில் படமாக்கும் பணிகள் தற்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதன் படி இப்படம் கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் தேதி வெளியாக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 'ஆளவந்தான்' படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்த கமலின் ஒரு தோற்றம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு மிகவும் விசித்திரமாக இருக்கும். இந்த கதாபாத்திரத்திற்காக தன்னுடைய உடலை ஏற்றி நடித்திருந்தார்.

மேலும் செய்திகள்: துளியும் மேக்கப் இன்றி... மூன் லைட் வெளிச்சத்தில் மின்னும் நட்சத்திரமாய் மூட் அவுட் செய்யும் திவ்ய பாரதி!!
 

3D version of Kamal Haasan  aalavanthan movie will be released soon

இந்த திரைப்படம் வெளியாகி 20 வருடங்களுக்கு மேலே ஆனாலும், ரசிகர்கள் மத்தியில் ரசித்து பார்க்க கூடிய படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து, ரவீணா டாண்டன், மனிஷா கொய்ராலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம், வேற லெவல் வெற்றியை கொண்டாடிய ரசிகர்கள் விரைவில் வெற்றிப்படமாக ஆளவந்தான் 3டி வெர்ஷன் படத்தையும் கொண்டாட கார்த்திருக்கின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios