கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கால், வேலை இல்லாததால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் டிவி நடிகர் மன்மீத் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். இவரை தொடர்ந்து, பிரபல பாலிவுட் சீரியல் நடிகை 'பிரோக்ஷ மேத்தா' என்பவர் கடந்த திங்கள் கிழமை இரவு, அவருடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமும் மன அழுத்தம் என்றே கூறப்படுகிறது.

இவர்களை தொடர்ந்து, கன்னட டிவி பிரபலம் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்: பிராமணர் குறித்து சர்ச்சை வசனம்... உச்ச கட்ட ஆபாச காட்சிகள்..! பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் "காட்மேன்' டீசர்!
 

22 வயதான நடிகை மெபீனா மைக்கேல் பெங்களூருவில் இருந்து தனது சொந்த ஊரான மடிகேரிக்கு நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, ​இவர்கள் சென்ற வாகனம் எதிர்பாராத விதமாக தேவிஹிள்ளி அருகே வந்துகொண்டிருந்த டிராக்டர் மீது மோதியது. 

மேலும் செய்திகள்: ராதிகாவின் பேரன் செய்த செயலை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்! இந்த வயசுல என்ன ஒரு பொறுப்பு!
 

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அனைவருமே அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவரது நண்பர்கள் இன்னும் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போது மெபீனா மைக்கேல் பலத்த காயம் அடைந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்: இரண்டு சகோதரர்களை பறிகொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..! ரோட்டில் நின்று வேலை செய்த சோகம்! அதிர்ச்சி தகவல்!
 

இவர், Pyaate Hudugir Halli Life Season 4 என்கிற ரியாலிட்டி ஷோ மூலம் மிகவும் பிரபலமானவர். மேலும் மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி வந்தார். நடிகையாகும் ஆசையில் சில படங்களில் நடிக்க இவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், துரதிஷ்டவசமாக விபத்தில் உயிரிழந்துள்ளார்.