தற்போது 18வது சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசு சார்பில் ரூ.75 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 

திரையுலகினருக்கு தமிழக அரசு செய்து வரும் பல்வேறு உதவிகளில் மிகவும் முக்கியமானது சர்வதேச திரைப்பட விழாவிற்கு வழங்கப்படும் நிதி ஆகும். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது 2013ம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடியை மானியமாக வழங்கினார். அதுமட்டுமின்றி ஆண்டு தோறும் டிசம்பர் மாதத்தில் தமிழக அரசின் ஒத்துழைப்போடு சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. 

2020ம் ஆண்டு கொரோனா பெருந்தோற்று காரணமாக 18வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் மாதத்திற்கு பதிலாக 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி வரும் 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு முதல் சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்த 25 ரூபாய், 50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. 

Scroll to load tweet…

இதையும் படிங்க: “குக் வித் கோமாளி” பிரபலம் புகழுக்கு அடித்த ஜாக்பாட்... குவியும் வாழ்த்துக்களால் ரசிகர்கள் மகிழ்ச்சி...!

இதையடுத்து தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த தொகையை 75 லட்சமாக வழங்கினார். இறுதியாக 2019ம் ஆண்டு சென்னையில் நடந்த 17வது சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசு சார்பில் ரூ.75 லட்சம் வழங்கப்பட்டது. தற்போது 18வது சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசு சார்பில் ரூ.75 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இந்திய திரைப்பட திறனாய்வுக் கழகத்தின் பொதுச் செயலாளரும், சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் இயக்குநருமான தங்கராஜிடம் வழங்கினார். உடன் சுஹாசினி, மனோபாலா, சித்ரா லட்சுமணன் உள்ளிட்டோர் இருந்தனர்.