இந்தியப் பங்குச்சந்தைகள் 2 நாட்களுக்குப்பின் இன்று உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் ஏற்றத்துடன் உள்ளன.

இந்தியப் பங்குச்சந்தைகள் 2 நாட்களுக்குப்பின் இன்று உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் ஏற்றத்துடன் உள்ளன.

ஆனால், இதே ஏற்றமானநிலை தொடர்ந்து நீடிக்குமா என்பது உறுதியாகக் கூற இயலாது. பல்வேறு நிறுவனங்களின் 3வது காலாண்டு முடிவுகள் வருவதையடுத்து, முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்குவதால், சந்தையில் உயர்வு காணப்படுகிறது.

ஆனால், ஜனவரி மாத சில்லறைப் பணவீக்க நிலவரம் நேற்று வெளியானது. அதில்டிசம்பர் மாதத்தைவிட பணவீக்கம் அதிகரித்து 6.52 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் அடுத்து வரும் ஏப்ரல் மாதத்தில் ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை மேலும் உயர்த்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

பங்குச்சந்தையில் வீழ்ச்சி: ரூ.2 லட்சம் கோடி காலி! சென்செக்ஸ், நிப்டி 'டமார்'

அது மட்டுமல்லாமல் அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று முதலீட்டை எடுத்து வருவது தொடர்கிறது, நேற்று ஒருநாள் மட்டும் ரூ.2400 கோடிக்கு பங்குகளை விற்றுள்ளனர். அமெரி்க்கா, ஐரோப்பிய சந்தைகள் இன்னும் சிறப்பாகச் செயல்படவில்லை. சீனா, ஹாங் காங், தென் கொரியச் சந்தையும் மந்தமாகவே இருக்கிறது. 

அதனால், இந்திய முதலீட்டாளர்கள் எச்சரி்க்கையுடனே வர்த்தகத்தை அணுகுவார்கள். காலை வர்த்தகத்தில் பங்குச்சந்தை ஏற்றத்தில் இருக்கலாம், ஆனால், நேரம் செல்லச் செல்ல சந்தையில் மாற்றம், ஏற்ற இறக்கம் காணப்படலாம்.

காலை வர்த்தகத்தில் மும்பை பங்குசந்தையில் சென்செக்ஸ் 318 புள்ளிகள் அதிகரித்து, 60,749 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்துகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 77 புள்ளிகள் அதிகரித்து, 17,847 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்துகிறது.

பங்குச்சந்தையில் சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ச்சி: அதானி பங்குகள் சரிவு

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களின் பங்குகளில், 3 நிறுவனங்களைத் தவிர மற்ற 27 நிறுவனங்களின் பங்குகளும் லாபத்தில் உள்ளன. ஐடிசி, கோடக் வங்கி, டைட்டன் நிறுவனப் பங்குகள் சரிந்துள்ளன.

நிப்டியில் யுபிஎல், இன்போசிஸ், அதானி போர்ட்ஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ், டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் லாபத்தில் செல்கின்றன. அப்பலோ மருத்துவமனை, பிபிசிஎல், கோல் இந்தியா, கோடக் மகிந்திரா வங்கி, எஸ்பிஐ இன்சூரன்ஸ் பங்குகள் விலை சரிந்துள்ளன.

அதானி போர்ட்ஸ், அதானி என்டர்பிரைசர்ஸ், அதானி சிமெண்ட்ஸ் பங்குகள் விலை உயர்ந்துள்ளன. அதானி குழுமத்தின் மற்ற பங்குகள் விலை சரிந்துள்ளன.

கணக்குத் தணிக்கைக்காக அமெரிக்காவின் கிராண்ட் தார்ன்டன் நிறுவனத்துடன் அதானி குழுமம் ஒப்பந்தம்

நிப்டி துறைகளில், வங்கி, நிதிச்சேவை, ஐடி, உலோகம், எப்எம்சிஜி, பொதுத்துறை வங்கி, தனியார் வங்கித்துறை பங்குகள் லாபத்தில் உள்ளன. ஆட்டோமொபைல், மருந்துத்துறை, ரியல்எஸ்டேட், ஊடகம் உள்ளிட்ட துறைகளின் பங்குகள் சரிவில் உள்ளன