இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் சரிந்துள்ளன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தன. முதலீட்டாளர்களுக்கு இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் சரிந்துள்ளன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தன.

சந்தையில் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு இன்று ஒரே நாளில் ரூ.2 லட்சம் கோடி குறைந்துள்ளது. 

சர்வதேச சந்தையில் நிலவும் ஏற்ற, இறக்கமன சூழல், அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டிவீத உயர்வு குறித்த அச்சம், அமெரிக்காவின் சில்லறை பணவீக்கம் விவரங்கள் வெளியாக இருக்கும் சூழல் போன்றவற்றால் இந்திய முதலீட்டாளர்கள் முதலீட்டீல் ஆர்வத்துடன் ஈடுபடவில்லை.

பங்குச்சந்தையில் முதல்நாளே சரிவு! சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் கடும் வீழ்ச்சி!

இன்று மாலை இந்தியாவின் ஜனவரி மாதத்துக்கான சில்லறைப் பணவீக்க புள்ளிவிவரங்களும், நாளை அமெரிக்க சில்லறைப் பணவீக்க புள்ளிவிவரங்களும் வெளியாகின்றன. இதனை அடிப்படையாக வைத்தே அடுத்து வட்டிவீத உயர்வு இருக்குமா என்பது தெரியவரும்.

இதனால் முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனே வர்த்தகத்தில் ஈடுபட்டனர். பங்குகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டாமல், பங்குகளை விற்பதிலேயே கவனம் செலுத்தினர். 

காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட பங்குச்சந்தையில் மாலை வர்த்தகம் முடிவுவரை ஊசலாட்டம் தொடர்ந்தது. மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 250 புள்ளிகள் குறைந்து, 60,431புள்ளிகளில் நிலைபெற்றது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 85 புள்ளிகள் சரிந்து,17,790 புள்ளிகளில் முடிந்தது.

‘டெட்டால் போட்டு வாயை கழுவுங்க’ – மக்களவையில் நிர்மலா சீதாராமன் காட்டம்

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனங்களின் பங்குகளில், 12 நிறுவனப் பங்குகள் லாபத்திலும், 18 நிறுவனப் பங்குகள் சரிவிலும் முடிந்தன. டைட்டன், எச்டிஎப்சி, லார்சன்அன்ட் டூப்ரோ, டாடா ஸ்டீல், எச்டிஎப்சி, என்டிபிசி, சன்பார்மா, கோடக் வங்கி, ஐடிச பங்குகள் விலை உயர்ந்தன.

நிப்டியில் அதானி என்டர்பிரைசர்ஸ், அதானி போர்ட்ஸ், எஸ்பிஐ, இன்போசிஸ், டிசிஎஸ் பங்குகள் விலை சரிந்தன. டைட்டன் நிறுவனம், என்டிபிசி, லார்சன் அன்ட் டூப்ரோ, பஜாஜ் ஆட்டோ, எய்ச்சர் மோட்டார்ஸ் பங்குகள் விலை சரிந்தன.

நிப்டி துறைகளில், உலோகம், பொதுத்துறை வங்கி, ஐடி துறைப் பங்குகள் தலா ஒரு சதவீதம் சரிந்தன, வங்கி, ஆட்டோமொபைல், மருந்துத்துறை .50 சதவீதம் குறைந்தன