வார வர்த்தகத்தின் முதல்நாளான இன்று இந்தியப் பங்குச்சந்தைகள் கடும்ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளன..
வார வர்த்தகத்தின் முதல்நாளான இன்று இந்தியப் பங்குச்சந்தைகள் கடும்ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளன..
உலகளவிலான பொருளதாரக் காரணிகள், நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் உள்ளன. இந்தச் சூழலில்தான் இந்தியச் சந்தைகள் இன்று வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.

ஆசியப் பங்குச்சந்தையும் ஊசலாட்டத்துடன், ஏற்ற, இறக்கத்துடனே வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. அமெரிக்க சில்லறைப் பணவீக்க புள்ளிவிவரங்கள் நாளை வெளியாக உள்ளன. இதில் பணவீக்கம் உயர்ந்துள்ளதா அல்லது குறைந்துள்ளதாக எனத் தெரியவரும்.
பங்குச்சந்தையில் சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ச்சி: அதானி பங்குகள் சரிவு
இதை அடிப்படையாக வைத்துதான் பெடரல் ரிசர்வ் அடுத்துவரும் கூட்டத்தில் வட்டிவீத உயர்வு குறித்த முடிவை எடுக்கும். அந்த வகையில் முதலீட்டாளர்கள் அமெரி்க்க சில்லறை பணவீக்க புள்ளிவிவரங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
காலை வர்த்தகத்தில் மும்பை, தேசியப் பங்குச்சந்தைகள் சரிவில் தொடங்கினாலும், சிறிது நேரத்தில் உயர்வுநிலைக்குச் சென்று மீண்டும் வீழ்ச்சி அடைந்து ஊசலாட்டத்துடன் காணப்படுகின்றன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 255 புள்ளிகள் சரிந்து 60,427 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது, தேசியப் பங்குச்சந்தையில் 74 புள்ளிகள் குறைந்து, 17,782புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்துகிறது.

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனப் பங்குகளில் 11 நிறுவனப் பங்குகள் சரிவிலும், 19 நிறுவனப் பங்குகள் லாபத்திலும் உள்ளன. சன்பார்மா, டாடா மோட்டார்ஸ், லார்சன் அன்ட் டூப்ரோ, டிசிஎஸ்,எச்சிஎப்சி வங்கி, எச்டிஎப்சி, எச்சிஎல் டெக், விப்ரோ, டெக்மகிந்திரா, இன்போசிஸ் பங்குகள் விலை குறைந்துள்ளன.
நிப்டி துறைகளில் உலோகத்துறையைத் தவிர பொதுத்துறை வங்கி, உலோகம்,வங்கி, ஆட்டமொபைல், எப்எம்சிஜி . தகவல்தொழில்நுட்பம், ஊடகம், தனியார் வங்கி, மருத்துவத்துறை, ரியல்எஸ்டேட் துறைப் பங்குகள் சரிவில் உள்ளன.

மீண்டது பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி உயர்வு: அதானி பங்குகள் கடும் வீழ்ச்சி
நிப்டியில் அதானி போர்ட்ஸ், அதானி என்டர்பிரைசர்ஸ், பஜாஜ் ஆட்டோ, மகிந்திரா அன்ட் மகிந்திரா,யுபிஎல் பங்குகள் லாபத்தில் உள்ளன. கோல் இந்தியா, இன்போசிஸ், எச்டிஎப்சி, டிவிஸ் லேப்ஸ், விப்ரோ பங்குகள் சரிவில் உள்ளன
