MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • இனி ATM-களில் 10, 20, 50 ரூபாய் நோட்டுகள்.. அசத்தல் அறிவிப்பு.. இதோ முழு விவரம்!

இனி ATM-களில் 10, 20, 50 ரூபாய் நோட்டுகள்.. அசத்தல் அறிவிப்பு.. இதோ முழு விவரம்!

நாட்டில் போதிய அளவில் 10, 20, 50 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இனி ATM-களில் 10, 20, 50 ரூபாய் நோட்டுகள் பெற வழிவகை செய்யப்படும் என சூப்பர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1 Min read
Author : Rayar r
Published : Mar 10 2026, 10:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சில்லரை தட்டுப்பாடு
Image Credit : Asianet News

சில்லரை தட்டுப்பாடு

டிஜிட்டல் பணபரிவர்த்தனை காரணமாக இப்போது நாட்டில் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரொக்க பணப்புழக்கத்திற்காக ஏடிஎம்களில் 500 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகளை எடுக்கிறோம். இதிலும் பெரும்பாலான ஏடிஎம்களில் 100 ரூபாய்கள் கிடைப்பதில்லை. இந்த நிலையில், சில்லரை தட்டுப்பாட்டை தீர்க்க ATM-களில் 10, 20, 50 ரூபாய் நோட்டுகளை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

24
10, 20, 50 ரூபாய் நோட்டுகள்
Image Credit : our own

10, 20, 50 ரூபாய் நோட்டுகள்

இந்தியாவில் சிறிய மதிப்பிலான நோட்டுகளுக்குப் பற்றாக்குறை இருப்பதாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதற்கு பதில் அளித்து பேசிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி, ''நாட்டில் போதிய அளவில் 10, 20, 50 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. அதே வேளையில் பாரம்பரிய ஏடிஎம்கள் சிறிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை விநியோகிக்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை என்று பங்கஜ் சௌத்ரி விளக்கம் அளித்தார்.

Related Articles

Related image1
விமான பயணிகளுக்கு ஜாக்பாட்.. இனி டிக்கெட் கேன்சல் பண்ணா ஒரு ரூபாய் கூட நஷ்டம் இல்ல.. 100% ரீபண்ட்!
Related image2
ஒரு ரூபாய் நாணயம் தயாரிக்கும் செலவு எவ்வளவு தெரியுமா? ரொம்ப அதிகமா இருக்கே!
34
ஏடிஎம்களில் 10, 20, 50 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும்
Image Credit : Asianet News

ஏடிஎம்களில் 10, 20, 50 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும்

ஆனால் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க ஒரு முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக நிதித்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த முயற்சியின் கீழ் சிறிய மதிப்பு வழங்கும் இயந்திரங்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த இயந்திரங்கள் மூலம் மக்கள் நேரடியாக ரூ.10, ரூ.20 மற்றும் ரூ.50 நோட்டுகளை எடுக்க முடியும். இதன் மூலம் ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போதே மக்கள் சில்லறையைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

44
எவ்வளவு நோட்டுகள் விநியோகத்தில் உள்ளன?
Image Credit : Google

எவ்வளவு நோட்டுகள் விநியோகத்தில் உள்ளன?

மத்திய அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு நிதியாண்டில் 439.4 கோடி எண்ணிக்கையில் 10 ரூபாய் நோட்டுகள், 193.7 கோடி எண்ணிக்கையில் 20 ரூபாய் நோட்டுகள், 130.3 கோடி எண்ணிக்கையில் 50 ரூபாய் நோட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.

 இந்தியாவில் வெவ்வேறு மதிப்பிலான ரூபாய் நோட்டுகளுக்கான தேவையை இந்திய ரிசர்வ் வங்கி ஆய்வு செய்து, எத்தனை நோட்டுகளை அச்சிட வேண்டும் என்று பரிந்துரைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்தியா
வணிகம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
சிலிண்டர் தட்டுப்பாடு.. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்.. ஐபிஎல் போட்டிகள் நடக்குமா?
Recommended image2
இண்டிகோ சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் திடீர் பதவி விலகல்.. 3 லட்சம் பயணிகள் தவிப்பு.. ரூ.2000 கோடி இழப்பு!
Recommended image3
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.! சிலிண்டர் தட்டுப்பாடு.! இந்த தப்ப செஞ்சா 7 வருஷம் ஜெயில்.! எச்சரிக்கையா இருங்க மக்களே.!
Related Stories
Recommended image1
விமான பயணிகளுக்கு ஜாக்பாட்.. இனி டிக்கெட் கேன்சல் பண்ணா ஒரு ரூபாய் கூட நஷ்டம் இல்ல.. 100% ரீபண்ட்!
Recommended image2
ஒரு ரூபாய் நாணயம் தயாரிக்கும் செலவு எவ்வளவு தெரியுமா? ரொம்ப அதிகமா இருக்கே!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved