share market today:பங்குச்சந்தையில் ரூ.5 லட்சம் கோடி நஷ்டம்: 59,000 புள்ளிகளுக்கு கீழ் சென்செக்ஸ்: என்ன காரணம்
மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ், தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி வாரத்தின் முதல்நாளான இன்று படுமோசமான வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை முடித்ததன. சென்செக்ஸ் 59ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது.
மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ், தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி வாரத்தின் முதல்நாளான இன்று படுமோசமான வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை முடித்ததன. சென்செக்ஸ் 59ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது.
அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு, அமெரி்க்க பங்கு பத்திரங்கள் மதிப்பு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பால் மும்பை, தேசியப் பங்குச்சந்தையில் சரிவு மோசமானதாக இருந்தது.
கடந்த 2 ஷெசன்களில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
தங்கம் விலை வீழ்ச்சி !இந்த வாரம் தங்கம் விலையை தீர்மானிக்கும் 5 காரணிகள்:இன்றைய நிலவரம் என்ன?
சென்செக்ஸ் புள்ளிகள் இரு நாட்களில் 1500 புள்ளிகள் குறைந்துள்ளது. நீண்டநாட்களுக்கு பின் பிஎஸ்இ சந்தையில் சென்செக்ஸ் 59ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது.
அமெரிக்க பெடரல் வங்கியின் ஜேக்ஸன் ஹோலின் ஆண்டுக் கூட்டம் வரும் 25ம் தேதி முதல் 27ம் தேதிவரை நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் செப்டம்பர் மாதத்தில் வட்டி வீதத்தை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த எதிர்ப்புடன் ஆசியப் பங்குச்சந்தையும் அணுகியதால், ஆசியச்சந்தையிலும் கடும் ஏற்ற இறக்கம் காணப்பட்டது.
தங்கப் பத்திரம் விற்பனை இன்று தொடக்கம்: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்
கடந்த 18ம் தேதி மும்பைப் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு ரூ.280.52 லட்சம் கோடியாக இருந்தது. இது இருஷெசன்களில் ரூ.4.91 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு, ரூ.275.61 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.
இன்று மாலை வர்த்தகம் முடிவில் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 872.28 புள்ளிகள் சரிந்து, 58,773 புள்ளிகளில் வீழ்ந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 267.75 புள்ளிகள் குறைந்து, ரூ.17,490 புள்ளிகளில் முடிந்தது.
சரிவுக்கான காரணங்கள்
அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பால் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடு செய்யாமல் பங்குகளை விற்று முதலீட்டை காப்பாற்ற விரும்பியதால் பங்குகள் மதிப்பு சரிந்தன.
அமெரிக்க பெடரல் வங்கியின் ஜேக்ஸன் ஹோல் சிம்பாயிஸம் கூட்டம் வரும் 25 முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் பெடரல் ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை உயர்த்துவது குறித்து
ஆலோசிக்கலாம். பணவீக்கத்தை குறைக்கும் நோக்கில் வட்டிவீதம் உயர்த்த பரிந்துரைத்தால் அமெரிக்க டாலர் வலுப்பெறும் ஆசியச் சந்தையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் என்பதால் முன்கூட்டியே முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றனர்.
இனி ஏமாற்ற முடியாது! தரம் குறைந்த, உண்மையில்லா செய்திகள் ரேங்கிங் ஆகாது: கூகுள் கிடுக்கிப்பிடி
ஆசியச் சந்தையின் போக்கு
ஆசியச்சந்தையில் கடும் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. சீனா திடீரென வட்டி வீதத்தை குறைத்தது, அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு ஆசியச் சந்தையில் குழப்பமான சூழலை ஏற்படுத்தியது. இதனால் தென் கொரியப் பங்குச்சந்தைசற்று ஏற்றத்துடன் முடிந்தது. இந்தோனேசியா, டோக்கியோ சந்தை சரிந்தது. நியூஸிலாந்து, ஷாங்காய், சிங்கப்பூர் ஆகிய சந்தை உயர்ந்தது.
மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களில் டாடா ஸ்டீல் பங்கு 4 சதவீதம் சரிந்தது. ஏசியன் பெயின்ட்ஸ், விப்ரோ, லார்சன் அன்ட் டூப்ரோ, பஜாஜ் ட்வின்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், கோடக் வங்கி, ஆக்சிஸ் வங்கி, சன் ஃபார்மா, டெக் மகிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐவங்கி ஆகியவற்றின் பங்குகள் 2 முதல் 3.8சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன. ஐடிசி, நெஸ்ட்லே இந்தியா பங்குகள் மட்டும் லாபத்தில் முடிந்தன.