2022ம் ஆண்டுக்கான தங்கப்பத்திரம்(sovereign gold bond scheme 2022-23 series II) விற்பனையை ரிசர்வ் வங்கி இன்று தொடங்கி 26ம் தேதிவரை நடத்துகிறது.

2022ம் ஆண்டுக்கான தங்கப்பத்திரம்(sovereign gold bond scheme 2022-23 series II) விற்பனையை ரிசர்வ் வங்கி இன்று தொடங்கி 26ம் தேதிவரை நடத்துகிறது.

தங்கம் ஒரு கிராம் ரூ.5,197 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டில் தங்கப்பத்திரம் சேமிப்புத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. உண்மையான தங்கத்தின் பயன்பாட்டைக் குறைக்கவும், அதேசமயம், தங்கத்தின் மதிப்புக்கு உரிய பலன் அளிக்கவும் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. 

அச்சச்சோ..Google Pay, Phonepe யூஸ் பண்றீங்களா நீங்க ? இனிமே எல்லாமே கட்டணம் தான் !

2022 நிதியாண்டு சீரிஸ்

கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து தங்கப் பத்திரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ரிசர்வ் வங்கி 2022நிதியாம்டுக்கான 2-வது சீரிஸ் தங்கப்பத்திரங்களை இன்று( ஆகஸ்ட் 22ம் தேதி) முதல் 26ம் தேதிவரை விற்பனை செய்கிறது.

ஒரு கிராம் விலை எவ்வளவு

இந்த தங்கப்பத்திரம் சேமிப்புத் திட்டத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,197 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 99 சதவீதம் சுத்ததங்கத்தின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

தள்ளுபடி

ஆன்-லைன் மூலம் தங்கப்பத்திரத்துக்கு விண்ணப்பம் செய்வர்களுக்கு கிராம் ஒன்றுக்கு ரூ.50 தள்ளுபடி தரவும் ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ள்ளது. அவ்வாறு ஆன்-லைனில் விண்ணப்பித்தால் அவர்களுக்கு கிராம் ரூ.5,147 ஆக நிர்ணயிக்கப்படும்.

இனி ஏமாற்ற முடியாது! தரம் குறைந்த, உண்மையில்லா செய்திகள் ரேங்கிங் ஆகாது: கூகுள் கிடுக்கிப்பிடி

6 மாதத்துக்கு ஒருமுறை வட்டி

தங்கத்தை பொருளாக வைக்காமல் டிஜிட்டல் முறையில் வைப்பதால், பாதுகாப்பது எளிதானது. 6 மாதத்துக்கு ஒருமுறை 2.5 % வட்டித்தொகை கணக்கில் செலுத்தப்படும், 8 ஆண்டுகளுக்குப்பின் அன்றைய தங்கத்தின் விலைக்கு நிகாரக பணம்கிடைக்கும்.

எப்படி வாங்கலாம்

இந்த தங்கப்பத்திரத்தை வாங்க விருப்பம் உள்ளவர்கள், பான்கார்டு, ஆதார் கார்டு, வங்கி கணக்குப்புத்தகம், அடையாள அட்டை இதில்ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். இதில் ஏதாவதுஒன்றின் நகலை எடுத்து, தபால் நிலையம், குறிப்பிட்ட வங்கிகள், என்எஸ்இ, பிஎஸ்சி பங்குச்சந்தை அலுவலகங்களில் விற்பனை அங்கு வழங்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தங்கப்பத்திரத்தை வாங்கலாம்.

2021-22ம்ஆண்டில் 10 தவணைகளில் தங்கப்பத்திரங்கள் ரூ.12,991 கோடிக்கு, (தங்கத்தின் எடைமதிப்பில் 27 டன் விற்பனை) விற்கப்பட்டது. 

புதிய மாருதி ‘மைலேஜ் அரசன்’ அல்டோ k10 கார்: ரூ.3.90 லட்சத்தில் அட்டகாச வசதிகள்

எவ்வளவு வாங்கலாம்
தங்கப்பத்திரம் தங்கத்தின் மதிப்பில் ஒருநபர் 4 கிலோ வரை வாங்கலாம். இந்துகூட்டுக்குடும்பத்தினர் 4 கிலோ, அறக்கட்டளை, நிறுவனங்கள் ஒரு நிதியாண்டுக்கு 20 கிலோ வரை வாங்கலாம்