MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • இந்த வங்கியின் லைசன்ஸ் ரத்து.. இனி பணம் எடுக்க முடியாது.. உங்க வங்கி இருக்கா?

இந்த வங்கியின் லைசன்ஸ் ரத்து.. இனி பணம் எடுக்க முடியாது.. உங்க வங்கி இருக்கா?

குறிப்பிட்ட இந்த வங்கியின் லைசன்ஸை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நிரந்தரமாக ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக அந்த வங்கி இனி டெபாசிட் ஏற்கவும், பணம் எடுக்கவும் உள்ளிட்ட எந்தவித வங்கி சேவைகளையும் வழங்க முடியாது.

2 Min read
Author : Raghupati R
Published : Mar 08 2026, 06:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வங்கியின் லைசன்ஸ் ரத்து
Image Credit : Google

வங்கியின் லைசன்ஸ் ரத்து

வங்கி துறையில் பெரிய அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. நீண்டநாள் சட்டப்போராட்டத்திற்குப் பிறகு, ஒரு முக்கிய வங்கியின் செயல்பாடுகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அந்த வங்கியில் பணம் வைத்திருந்த வாடிக்கையாளர்கள் பலரும் கவலையில் உள்ளனர். வங்கி தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

25
இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Image Credit : Getty

இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இந்த விவகாரம் இன்று ஏற்பட்டது அல்ல. 2024 ஜூலை 5ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) முதன்முதலில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த உத்தரவின் மூலம் அந்த வங்கியின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக உடனடியாக வங்கி சேவைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த வங்கி இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகியது.

Related Articles

Related image1
இல்லத்தரசிகளுக்கு சமையல் செலவு அதிகரிப்பு.. எண்ணெய் விலை திடீர் உயர்வு.. எவ்வளவு?
Related image2
ஐடி துறையில் அதிர்ச்சி.. ஆரக்கிள் நிறுவனத்தில் 30,000 வேலைகள் பறிபோகுமா?
35
வங்கி மூடல்
Image Credit : Getty

வங்கி மூடல்

வங்கியின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் 2024 ஜூலை 25ஆம் தேதி இடைக்கால தடை உத்தரவை வழங்கியது. இதனால் ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன் பின் இந்த தடை காலம் பல முறை நீட்டிக்கப்பட்டது. கடைசியாக 2026 மே 24ஆம் தேதி வரை அந்த தடை நீடிக்கும் வகையில் உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. இதனால் அந்த வழக்கு நீண்ட காலமாக சட்டப் போராட்டமாகவே தொடர்ந்தது.

45
வங்கி லைசன்ஸ் ரத்து காரணம்
Image Credit : ChatGPT

வங்கி லைசன்ஸ் ரத்து காரணம்

ஆனால் இந்த வழக்கில் மிகப்பெரிய திருப்பம் 2026 பிப்ரவரி 17ஆம் தேதி ஏற்பட்டது. வங்கியே தன்னுடைய மனுவை திரும்பப் பெற்றதால், உயர் நீதிமன்றம் அந்த வழக்கை முடித்து விட்டது. இதனால் ஆர்பிஐ முன்பு வெளியிட்ட உத்தரவு மீண்டும் அமலுக்கு வந்தது. அதன் விளைவாக கர்நாடகாவின் மண்டியா மாவட்டம் மத்தூர் பகுதியில் செயல்பட்டு வந்த ஷிம்ஷா சககரா வங்கி நியாமிதா (Shimsha Sahakara Bank Niyamitha) வங்கியின் லைசன்ஸ் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

55
வங்கி வாடிக்கையாளர்கள் கவனம்
Image Credit : Social Media

வங்கி வாடிக்கையாளர்கள் கவனம்

இப்போது அந்த வங்கி எந்த வங்கி சேவைகளையும் வழங்க முடியாது. புதிய டெபாசிட் ஏற்கவும், பணத்தை வாபஸ் பெறவும் அனுமதி இல்லை. வங்கியின் சொத்துக்கள் மற்றும் நிதி நிலைமைகள் ஆய்வு செய்யப்பட்டு, லிக்விடேட்டர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதற்கிடையில், வாடிக்கையாளர்களின் டெபாசிட் பாதுகாப்பு குறித்து DICGC விதிகள் அமலில் இருக்கும். அதாவது ஷிம்ஷா சககரா வங்கி நியாமிதா வங்கியில் பணம் வைத்திருப்பவர்கள் ரூ.5 லட்சம் வரை காப்பீட்டு பாதுகாப்பு பெற வாய்ப்பு உள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வங்கி
வங்கிக் கணக்கு
வங்கி விதிகள்
இந்திய ரிசர்வ் வங்கி
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
How to reduce charges while buying jewellery? நகை வாங்கும் போது செய்கூலியைக் குறைக்க சில வழிகள்
Recommended image2
EPFO ​​3.0: இனி பிஎஃப் அலுவலகம் அலைய வேண்டாம்! UPI மூலம் PF பணம் எடுக்கும் வசதி - EPFO 3.0 அதிரடி மாற்றம்!
Recommended image3
இனி கவலை இல்லை.. LPG சிலிண்டர் விலை குறையப் போகுது.. இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்!
Related Stories
Recommended image1
இல்லத்தரசிகளுக்கு சமையல் செலவு அதிகரிப்பு.. எண்ணெய் விலை திடீர் உயர்வு.. எவ்வளவு?
Recommended image2
ஐடி துறையில் அதிர்ச்சி.. ஆரக்கிள் நிறுவனத்தில் 30,000 வேலைகள் பறிபோகுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved