செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டேட்டா சென்டர் முதலீடுகளால் ஏற்படும் செலவுகளைக் கட்டுப்படுத்த, ஆரக்கிள் கார்ப்பரேஷன் ஆயிரக்கணக்கான வேலைகளைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
ஆரக்கிள் கார்ப்பரேஷன் நிறுவனம் ஆயிரக்கணக்கான வேலைகளைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்த அறிவிப்பு இந்த மாதத்திலேயே வெளியாக வாய்ப்புள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் கார்ப்பரேஷன். ஆரக்கிள் நிறுவனத்தில் விரைவில் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான மிகப்பெரிய முதலீடுகள் மற்றும் டேட்டா சென்டர் கட்டுமானத் திட்டங்களுக்காக அதிக செலவுகள் ஏற்பட்டுள்ளதால், நிறுவனத்தின் செலவினங்களை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஆரக்கிள் நிறுவனத்தின் தலைவர் லாரி எலிசன் (Larry Ellison) தலைமையில், AI சேவைகளை வழங்கும் நோக்கில் உலகம் முழுவதும் புதிய டேட்டா சென்டர்கள் அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக OpenAI போன்ற நிறுவனங்களுக்கு AI கணினி திறன் வழங்குதல் இந்த டேட்டா சென்டர்கள் பயன்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் அமேசான் வெப் சர்வீஸ் (AWS) மற்றும் மைக்ரோசாப்ட் அஸுர் போன்ற முன்னணி கிளவுட் நிறுவனங்களுக்கு போட்டியாக ஆரக்கிள் வளர விரும்புகிறது.
இந்த பெரிய திட்டங்களுக்கு தேவையான முதலீட்டை திரட்டிய ஆரக்கிள் நிறுவனம் 2026 ஆம் ஆண்டில் சுமார் 50 பில்லியன் டாலர் வரை நிதி திரட்டும் திட்டத்தையும் கூறியது. கடன் மற்றும் பங்குகள் விற்பனை மூலம் இந்த தொகை திரட்டப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த முதலீடுகள் அடுத்த சில ஆண்டுகளில் நிறுவனத்தின் பணப்புழக்கம் குறையக்கூடும் என சந்தை ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, ஆரக்கிள் நிறுவனம் தனது பல பிரிவுகளில் உள்ள பணியிடங்களை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக AI தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், சில வேலைகள் எதிர்காலத்தில் தேவையற்றதாக மாறக்கூடும் என்பதால் அந்த துறைகளில் பணியாளர் குறைப்பு மேற்கொள்ளலாம் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஆரக்கிள் நிறுவனத்தின் கிளவுட் பிரிவில் புதிய பணியாளர் நியமனங்களையும் தற்காலிகமாக மந்தமாக்குவது அல்லது நிறுத்தப்படும் நடவடிக்கையும் பரிசீலிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூறினார். தற்போது உலகம் முழுவதும் ஆரக்கிள் நிறுவனத்தில் சுமார் 1.62 லட்சம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஆரக்கிள் 20,000 முதல் 30,000 வேலைகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது, இது தீவிரமான AI தரவு மைய விரிவாக்கத்திலிருந்து செலவுகளை நிர்வகிப்பதற்கான அதன் மிகப்பெரிய மறுசீரமைப்பு முயற்சிகளில் ஒன்றாகும்.
AI டேட்டா சென்டர்களை அமைப்பதற்கான மிகப்பெரிய முதலீடுகள் காரணமாக தொழில்நுட்ப துறையில் பணிநீக்கங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு Microsoft நிறுவனம் சுமார் 15,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பல நிறுவனங்கள் AI மற்றும் கிளவுட் தொழில்நுட்ப முதலீடுகளை சமநிலைப்படுத்தும் நோக்கில் பணியாளர் எண்ணிக்கையை குறைக்கிறது மேற்கொண்டு வருகின்றன.


