MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Petrol & Diesel Quality: இனி பெட்ரோல், டீசலில் கலப்படம் இருக்காது! மத்திய அரசு அதிரடி!

Petrol & Diesel Quality: இனி பெட்ரோல், டீசலில் கலப்படம் இருக்காது! மத்திய அரசு அதிரடி!

Petrol & Diesel Quality: பெட்ரோல், டீசல் கலப்படத்தைத் தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. 87,000 பங்க்குகளில் தினமும் 8-12 முறை நீர் ஊடுருவல் சோதனை நடத்தப்படுகிறது. 

2 Min read
Author : Rayar A
Published : Aug 04 2026, 10:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இனி பெட்ரோல், டீசலில் கலப்படம் இருக்காது
Image Credit : Asianet News

இனி பெட்ரோல், டீசலில் கலப்படம் இருக்காது

எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் (OMCs) பெட்ரோல், டீசல் தரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் (MoPNG) தெரிவித்துள்ளது. எரிபொருள் சப்ளை செய்யப்படும் இடங்களில் எந்த கலப்படமும் நடக்காமல் தடுக்க, ஏற்கனவே இருக்கும் சோதனைகளுடன் சேர்த்து கூடுதல் சோதனைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பெட்ரோல், டீசலில் கலப்படம் நடப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியானதை அடுத்து, இந்த நடவடிக்கையை அமைச்சகம் எடுத்துள்ளது. எந்த பெட்ரோல் பங்க்கிலாவது கலப்படம் கண்டுபிடிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பெட்ரோல் பங்க்குகளில் தீவிர சோதனை
Image Credit : Getty

பெட்ரோல் பங்க்குகளில் தீவிர சோதனை

இந்த தீவிர கண்காணிப்பின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள 87,000-க்கும் அதிகமான பெட்ரோல் பங்க்குகளில், ஒரு நாளைக்கு 8 முதல் 12 முறை 'வாட்டர் இன்ஃப்ரெஸ் டெஸ்டிங்' (water ingress testing), அதாவது பெட்ரோலில் தண்ணீர் கலந்திருக்கிறதா எனப் பார்க்கும் சோதனை நடத்தப்படுவதாக அமைச்சகம் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் தரத்தை உறுதி செய்ய ஏற்கனவே உள்ள நடைமுறைகளை இன்னும் வலுப்படுத்தவே இந்த கூடுதல் சோதனைகள் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

Related Articles

Related image1
Best Mileage Petrol Cars: சிஎன்ஜி வேண்டாம்! அதிக மைலேஜ் தரும் இந்தியாவின் 5 சிறந்த பெட்ரோல் கார்கள்
Related image2
Petrol Price: 1 லிட்டருக்கு ரூ.30 மிச்சம்! இது மட்டும் இல்லனா பெட்ரோல் விலை ரூ.135 போயிருக்கும் - மத்திய அரசு
34
கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
Image Credit : Asianet News

கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட எரிபொருள் மாதிரிகளை எடுத்து, அதில் குளோரைடு மற்றும் சல்பைடு கலப்படம் இருக்கிறதா என்றும் சோதனை செய்துள்ளனர். நாடு முழுவதும் நடந்த இந்த சோதனைகளில், இரண்டே இரண்டு இடங்களில் மட்டும்தான் குளோரைடு கலப்படம் கண்டுபிடிக்கப்பட்டதாக அமைச்சகம் கூறியுள்ளது.

குளோரைடு கலப்படம் கண்டுபிடிக்கப்பட்ட அந்த இரண்டு பெட்ரோல் பங்க்குகளிலும் விற்பனை உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. இனி எங்கேனும் எரிபொருளில் கலப்படம் கண்டுபிடிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

44
எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு
Image Credit : Gemini AI

எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு

பெட்ரோல் பங்க்குகளில் மட்டும் சோதனை செய்யாமல், எரிபொருள் சப்ளை செய்யப்படும் அனைத்து இடங்களிலும், அதாவது சப்ளை செயின் முழுவதிலும், கலப்படத்தை முன்கூட்டியே கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு (OMCs) அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், விநியோக நெட்வொர்க்கின் வெவ்வேறு கட்டங்களில் தரப் பிரச்சினைகளைக் கண்டறிய முடியும்.

எண்ணெய் நிறுவனங்களிடம் ஏற்கனவே நவீனமான மற்றும் விரிவான சோதனை முறைகள் உள்ளன. இப்போது கொண்டு வந்துள்ள கூடுதல் சோதனைகள், அந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளை இன்னும் பலப்படுத்தும் நோக்கத்தில் செய்யப்பட்டுள்ளன.

'வாட்டர் இன்ஃப்ரெஸ்' சோதனைகள்

பெட்ரோல் சேமித்து வைக்கும் டேங்குகளில் தண்ணீர் கலந்திருக்கிறதா என்பதைக் கண்டறியவே இந்த 'வாட்டர் இன்ஃப்ரெஸ்' சோதனைகள் அடிக்கடி நடத்தப்படுகின்றன. அதேபோல, குளோரைடு, சல்பைடு சோதனைகள் குறிப்பிட்ட சில ரசாயனக் கலப்படங்களைக் கண்டறிய உதவுகின்றன.

எரிபொருளில் கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க்குகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சகம் மீண்டும் ஒருமுறை எச்சரித்துள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மத்திய அரசு
பெட்ரோல் டீசல் விலை
இந்தியா
Latest Videos
Recommended Stories
Recommended image1
Business Idea: பழைய பிளாஸ்டிக் டிரம் போதும்! லட்சங்களில் வருமானம் தரும் பிவிசி பைப் பிசினஸ் ஐடியா
Recommended image2
DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு? 8வது சம்பள கமிஷனுக்கு முன் குட் நியூஸ்
Recommended image3
Real Estate Investment: முதலீட்டுக்காக 2வது வீடு வாங்குறீங்களா? இந்த கணக்குகளை மறந்தா நஷ்டம் உறுதி!
Related Stories
Recommended image1
Best Mileage Petrol Cars: சிஎன்ஜி வேண்டாம்! அதிக மைலேஜ் தரும் இந்தியாவின் 5 சிறந்த பெட்ரோல் கார்கள்
Recommended image2
Petrol Price: 1 லிட்டருக்கு ரூ.30 மிச்சம்! இது மட்டும் இல்லனா பெட்ரோல் விலை ரூ.135 போயிருக்கும் - மத்திய அரசு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved