MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • மினிமம் பேலன்ஸ் இனி தேவையே இல்ல: ப்ரீ ஏ.டி.எம் கார்டுடன் ரிசர்வ் வங்கியின் BSBD அக்கவுண்ட் பற்றி தெரியுமா?

மினிமம் பேலன்ஸ் இனி தேவையே இல்ல: ப்ரீ ஏ.டி.எம் கார்டுடன் ரிசர்வ் வங்கியின் BSBD அக்கவுண்ட் பற்றி தெரியுமா?

மினிமம் பேலன்ஸ் அவசியமில்லை, இலவச ஏடிஎம் கார்டுடன் ஜீரோ பேலன்ஸ் BSBD கணக்கு தொடங்குவது எப்படி? ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் மற்றும் பலன்கள் பற்றி பார்ப்போம். ஏற்கனவே உள்ள வழக்கமான சேமிப்புக் கணக்கையும் எளிதாக BSBD கணக்காக மாற்றிக்கொள்ள முடியும்.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Sep 19 2026, 06:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
இலவச ஏ.டி.எம் கார்டுடன் ரிசர்வ் வங்கியின் BSBD அக்கவுண்ட்!
Image Credit : x

இலவச ஏ.டி.எம் கார்டுடன் ரிசர்வ் வங்கியின் BSBD அக்கவுண்ட்!

வங்கிச் சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை (Minimum Balance) பராமரிக்காததற்காக அபராதக் கட்டணம் வசூலிக்கப்படுவதும், புதிய கணக்கு தொடங்குவதற்கு ஆரம்ப வைப்புத் தொகையாக (Initial Deposit) ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை தேவைப்படுவதும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் சுமையாக உள்ளது. குறிப்பாக, தனியார் வங்கிகளில் ரூ.2,500 முதல் ரூ.5,000 வரை மினிமம் பேலன்ஸ் பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.

இத்தகைய சுமையைத் தவிர்க்கும் வகையில், 'பேசிக் சேவிங்க்ஸ் பேங்க் டெபாசிட்' (Basic Savings Bank Deposit - BSBD) எனப்படும் அடிப்படைக் கணக்குகள் குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
BSBD அக்கவுண்ட்-ன் முக்கியச் சிறப்பம்சங்கள் என்ன?
Image Credit : Asianet News

BSBD அக்கவுண்ட்-ன் முக்கியச் சிறப்பம்சங்கள் என்ன?

இக்கணக்கில் மினிமம் பேலன்ஸ் பராமரிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. எனவே, இருப்புத் தொகை இல்லாத காரணத்திற்காக வங்கிகள் அபராதம் விதிக்க முடியாது. புதிய BSBD கணக்கைத் தொடங்குவதற்கு எந்தவொரு ஆரம்ப டெபாசிட் தொகையையும் செலுத்த வேண்டியதில்லை.

ஏடிஎம்-கம்-டெபிட் கார்டு, பாஸ்புக், காசோலைப் புத்தகம், இணைய வழி (Internet Banking) மற்றும் கைபேசி வங்கி (Mobile Banking) போன்ற வசதிகள் வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளரின் கோரிக்கையின் பேரில், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள வழக்கமான சேமிப்புக் கணக்கை எளிதாக BSBD கணக்காக மாற்றிக்கொள்ள முடியும்.

33
அக்கவுண்ட் தொடங்குவதற்கான தகுதிகள் & விதிமுறைகள் என்ன?
Image Credit : Asianet News

அக்கவுண்ட் தொடங்குவதற்கான தகுதிகள் & விதிமுறைகள் என்ன?

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி, இந்த BSBD கணக்கை எந்தவொரு தனிநபரும் சுலபமாகத் தொடங்கலாம். குறிப்பிட்ட வயது வரம்போ அல்லது வருமான வரம்போ இதற்கு நிர்ணயிக்கப்படவில்லை. அடையாளச் சான்றாக ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு (PAN Card) அல்லது படிவம் எண் 60 (Form 60) சமர்ப்பித்து இக்கணக்கை எளிதில் தொடங்கிவிடலாம்.

BSBD அக்கவுண்ட்-ல் வரம்பின்றி எத்தனை முறை வேண்டுமானாலும் வாடிக்கையாளர்கள் பணத்தைச் செலுத்தலாம். ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 4 முறை கட்டணமின்றி பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. ஏடிஎம் வழியே பணம் எடுப்பது, RTGS, NEFT, கிளியரிங், இன்டர்நெட் டெபிட், நிலையான ஆணை (Standing Order) மற்றும் இஎம்ஐ (EMI) பிடித்தங்கள் ஆகிய அனைத்தும் இந்த 4 பரிவர்த்தனைகளுக்குள் அடங்கும். ஒரு வாடிக்கையாளர் எந்த வங்கியில் BSBD கணக்கு வைத்திருக்கிறாரோ, அதே வங்கியில் வழக்கமான மற்றொரு சேமிப்புக் கணக்கை வைத்திருக்க முடியாது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வணிகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jio 5G Booster Pack: ஜியோ கஸ்டமர்களுக்கு செம கிஃப்ட்.. வெறும் ரூ.51-க்கு 5G டேட்டா!
Recommended image2
Flight Ticket: விமான பயணிகளுக்கு பேரதிர்ச்சி.. 20% வரை உயரப் போகும் டிக்கெட் கட்டணம்? முழு விவரம்!
Recommended image3
UPI மூலம் பணம் அனுப்பும்போது இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க! மோசடியில் சிக்காமல் இருக்க 9 முக்கிய பாதுகாப்பு விதிகள்!
Related Stories
Recommended image1
Reliance Smart Bazaar: மளிகை பொருட்கள் விலை இவ்ளோ குறைவா?! எந்த பொருளை எப்படி வாங்கினால் லாபம்?!
Recommended image2
Women Home Business: பெண்கள் வீட்டிலிருந்தே தொழில் தொடங்க அரசு கடன், மானியம்! எப்படி பெறுவது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved