MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Petrol Price: 1 லிட்டருக்கு ரூ.30 மிச்சம்! இது மட்டும் இல்லனா பெட்ரோல் விலை ரூ.135 போயிருக்கும் - மத்திய அரசு

Petrol Price: 1 லிட்டருக்கு ரூ.30 மிச்சம்! இது மட்டும் இல்லனா பெட்ரோல் விலை ரூ.135 போயிருக்கும் - மத்திய அரசு

Petrol Price: பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டம் மட்டும் இல்லாமல் இருந்தால் இந்தியாவில் பெட்ரோல் விலை 135 ரூபாயை தாண்டி சென்றிருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2 Min read
Author : Rayar A
Published : Aug 02 2026, 04:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
எத்தனால் இல்லைனா பெட்ரோல் விலை உச்சம்
Image Credit : Asianet News

எத்தனால் இல்லைனா பெட்ரோல் விலை உச்சம்

பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டத்தின் (EBP) மீதான விமர்சனங்களுக்குப் பதிலளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், இந்தத் திட்டம் மட்டும் இல்லாதிருந்தால், டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 125 ரூபாயைத் தொட்டிருக்கும் (சென்னையின் இப்போதைய பெட்ரோல் விலையை ஒப்பிடும்போது ரூ.135 போயிருக்கும்) என்று தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக ஏறியபோதும், இந்திய மக்களுக்கு இந்தத் திட்டம் பெரிய நிதி நெருக்கடியிலிருந்து நிவாரணம் அளித்துள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
லிட்டருக்கு ரூ.30 சேமிப்பு
Image Credit : Getty

லிட்டருக்கு ரூ.30 சேமிப்பு

"இதன் பலன் என்ன தெரியுமா? நெருக்கடியான நேரத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 30 ரூபாய் சேமிப்பு. எத்தனால் கலப்பு என்பது தினமும் மலிவான எரிபொருளைக் கொடுப்பது மட்டுமல்ல. உலக எண்ணெய் சந்தையின் பயங்கரமான விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து இந்திய நுகர்வோரைப் பாதுகாப்பது, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவது, மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்லும் பணத்தை இந்தியப் பொருளாதாரத்திற்குள்ளேயே வைத்திருப்பதுதான் இதன் நோக்கம்," என்று அமைச்சகம் விளக்கியுள்ளது.

இந்திய கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 135 டாலர் வரை உயர்ந்தபோது கூட, நுகர்வோர் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 94.77 ரூபாய் மட்டுமே செலுத்தினர். காரணம், ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலிலும் 20% உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, நிலையான விலையில் கிடைக்கும் எத்தனால் கலக்கப்பட்டிருந்தது.

Related Articles

Related image1
Petrol : காலை நேரத்தில் பெட்ரோல் போட்டால் மைலேஜ் அதிகரிக்குமா? உண்மை என்ன?
Related image2
LPG Price Cut: அதிகாலையிலேயே குட்நியூஸ்.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை.. எவ்ளோ தெரியுமா?
34
கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் பெட்ரோல் விலை உயரவில்லை
Image Credit : X

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் பெட்ரோல் விலை உயரவில்லை

அமைச்சகம் வெளியிட்ட ஒரு பத்திரிகை செய்தியில், "இந்திய கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 135 டாலராக உயர்ந்தபோது, எத்தனால் கலக்காத பெட்ரோலின் விலை டெல்லியில் லிட்டருக்கு 125 ரூபாயாக இருந்திருக்கும் என்று கணிக்கப்பட்டது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், நுகர்வோர் செலுத்தியது 94.77 ரூபாய்தான். "ஏனெனில், ஒவ்வொரு லிட்டரிலும் 20% உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட எத்தனால் இருந்தது. அதன் விலை, உலக கச்சா எண்ணெய் விலை உயர்வால் பாதிக்கப்படாத, முன்பே ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையான விலையாகும்," என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

44
பெட்ரோலில் எத்தனால் கலப்புத் திட்டத்தின் பயன்
Image Credit : Getty

பெட்ரோலில் எத்தனால் கலப்புத் திட்டத்தின் பயன்

இந்த எத்தனால் கலப்புத் திட்டத்தின் மூலம் இதுவரை 1.97 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது. 316 லட்சம் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மாற்றாக இது அமைந்துள்ளது. மேலும், 950 லட்சம் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான CO₂ உமிழ்வு குறைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் வரி செலுத்துவோர் பணத்தில் நடக்கும் மானியம் என்ற குற்றச்சாட்டையும் அமைச்சகம் நிராகரித்துள்ளது.

"எத்தனால் கலப்பு என்பது வரி செலுத்துவோர் மானியம் அல்ல. இது இந்தியாவின் எரிசக்தி காப்பீடு. நெருக்கடி வந்தபோது அது தன்னை நிரூபித்துள்ளது," என்று அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த முயற்சி மூலம் விவசாயிகளுக்கும், எத்தனால் உற்பத்தி ஆலைகளுக்கும் நேரடியாக 1.66 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பணம் கிடைத்துள்ளது. இதன் மூலம் விவசாய விளைபொருட்களுக்கு ஒரு நம்பகமான உள்நாட்டு சந்தை உருவாகியுள்ளது. மேலும், கச்சா எண்ணெய்க்காக 88% வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் இந்தியாவின் நிலைமையையும் இது குறைக்கிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
பெட்ரோல்
பெட்ரோல் டீசல் விலை
இந்தியா
Latest Videos
Recommended Stories
Recommended image1
Fixed Deposit: ஃபிக்ஸட் டெபாசிட் வட்டிக்கு RBI புதிய விதிகள்.. அக்டோபர் 1 முதல் எல்லா வங்கிகளிலும் முக்கிய மாற்றம்
Recommended image2
Plastic Notes: பிளாஸ்டிக் நோட்டுகள் வந்தால் பழைய காகித நோட்டுகளுக்கு என்ன ஆகும் தெரியுமா?
Recommended image3
Small Business : வீட்டிலிருந்தே தொடங்கலாம்... நல்ல வருமானம் தரும் 5 சிறிய உணவுத் தொழில்கள்!
Related Stories
Recommended image1
Petrol : காலை நேரத்தில் பெட்ரோல் போட்டால் மைலேஜ் அதிகரிக்குமா? உண்மை என்ன?
Recommended image2
LPG Price Cut: அதிகாலையிலேயே குட்நியூஸ்.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை.. எவ்ளோ தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved