- Home
- Business
- Sugar Hoarding Law: 100 கிலோ சர்க்கரையை வீட்டில் வைத்தால் தண்டனையா? சட்டம் என்ன சொல்கிறது?
Sugar Hoarding Law: 100 கிலோ சர்க்கரையை வீட்டில் வைத்தால் தண்டனையா? சட்டம் என்ன சொல்கிறது?
சர்க்கரை பயன்படுத்தாத வீடுகளே தற்போது இல்லை.! தனிப்பட்ட தேவைக்காக 100 கிலோ சர்க்கரை வாங்கி வீட்டில் வைத்தால், அது 'பதுக்கல்' குற்றமாகுமா? வாங்க, இந்த கேள்விக்கான பதிலை விரிவாகப் பார்க்கலாம்.
15

Image Credit : Asianet News
சக்கர இனிக்குற சக்கர
சர்க்கரை விலை வேகமாக ஏறுவதால், பல குடும்பங்கள் முன்கூட்டியே அதிக சர்க்கரை வாங்க நினைக்கின்றன. திருவிழா, கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு நிறைய சர்க்கரை தேவைப்படும். அப்படி 100 கிலோ சர்க்கரை வாங்கினால், அது பதுக்கலாகக் கருதப்படுமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கான பதிலைத்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
25
Image Credit : Getty
வாங்குவது குற்றமல்ல.! வைத்திருப்பது?
சாதாரண நுகர்வோர், தன் வீட்டு உபயோகத்துக்காக 100 கிலோ சர்க்கரை வாங்குவது குற்றம் அல்ல. வீடுகளுக்கு என குறிப்பிட்ட இருப்பு வரம்பு எதுவும் இல்லை. செயற்கை தட்டுப்பாடு, விலை உயர்வைத் தடுக்க, இந்த இருப்பு வரம்பு விதிகள் வியாபாரிகள், டீலர்களுக்கு மட்டுமே பொருந்தும். எனவே, வீட்டில் 100 கிலோ சர்க்கரை இருந்தால் அபராதம், கைது போன்ற நடவடிக்கைகளுக்குப் பயப்படத் தேவையில்லை.
35
Image Credit : stockPhoto
அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் என்ன சொல்கிறது?
அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955-ன் கீழ், அரசு சில பொருட்களின் விநியோகம் மற்றும் இருப்பைக் கட்டுப்படுத்தலாம். பதுக்கல், கள்ளச்சந்தை ஆகியவற்றைத் தடுக்க, அரசு வணிக விநியோகத்தைக் கட்டுப்படுத்தும். சர்க்கரையும் இந்த சட்டத்தின் கீழ் வருகிறது. ஆனால், ஒரு குடும்பம் தனது சொந்த தேவைக்காக அதிக சர்க்கரை வாங்குவதை இது தடை செய்யாது.
45
Image Credit : Asianet News
தில்லுமுல்லு தில்லுமுல்லு
வியாபார நோக்கத்தில் சர்க்கரை வாங்கும்போது, விதிகள் மாறுகின்றன. சர்க்கரை டீலர்கள் மற்றும் வியாபாரிகள், அரசு நிர்ணயித்த இருப்பு வரம்பை மீறக்கூடாது. ஒரு டீலருக்கான அதிகபட்ச இருப்பு வரம்பு 4,000 குவிண்டால். குறிப்பிட்ட காலத்திற்குள் சரக்கை விற்க வேண்டும் என்ற விதியும் உள்ளது. சந்தையில் தில்லுமுல்லு செய்வதைத் தடுக்கவே இந்த கட்டுப்பாடுகள்.
55
Image Credit : ANI
அளவு மட்டும் முக்கியமல்ல, நோக்கமும் முக்கியம்
அளவு மட்டும் முக்கியமல்ல, நோக்கமும் முக்கியம். கல்யாணம், திருவிழா போன்றவற்றுக்கு வாங்கினால், அது வீட்டு உபயோகமாகக் கருதப்படும். ஆனால், ஒரு நபர் செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, அதிக விலைக்கு விற்கவோ, கள்ளச்சந்தையில் விற்கவோ நூற்றுக்கணக்கான குவிண்டால் சர்க்கரையை பதுக்கினால், அது சட்டப்படி குற்றம். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.
Latest Videos

