Tamil

அரிசியை பத்திரமா பாத்துக்கணும்!

நாம் வாங்கி வைக்கும் அரிசியில் கொஞ்ச நாளிலேயே வண்டு, புழு வந்துவிடுகிறதா? கவலை வேண்டாம். கெமிக்கல் எதுவும் இல்லாமல், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இதை சுலபமாக விரட்டலாம்.

Tamil

பிரியாணி இலை மற்றும் கிராம்பு

அரிசி வைத்திருக்கும் டப்பாவில் 4-5 பிரியாணி இலைகள், 8-10 கிராம்புகளைப் போட்டு வையுங்கள். அதன் வாசணை புழு, வண்டுகளுக்குப் பிடிக்காது. அவை உடனடியாக அரிசியை விட்டு வெளியேறிவிடும்.

Image credits: social media
Tamil

தோல் உரிக்காத பூண்டு

பூண்டின் 5-6 பற்களைத் தோல் உரிக்காமல், அரிசியின் நடுவில்  புதைத்து வையுங்கள். பூண்டு காய்ந்த பிறகு, அதை எடுத்துவிட்டு புதிய பற்களை வைக்கலாம். பூண்டின் நெடி, வண்டுகளை அண்டவிடாது.

Image credits: Getty
Tamil

வேப்பிலையின் மேஜிக்

காய்ந்த வேப்பிலைகளை ஒரு மெல்லிய பருத்தித் துணியில் கட்டி, அரிசி டப்பாவிற்குள் வைத்துவிடுங்கள். வேப்பிலை அரிசியில் புழு, வண்டுகள் உருவாகாமல் தடுக்கும்.

Image credits: Getty
Tamil

காய்ந்த மிளகாய் போதும்

அரிசியில் 3-4 முழு காய்ந்த மிளகாய்களைப் போட்டு வையுங்கள். மிளகாயின் காரமான வாசனைக்கு, அரிசியில் மறைந்திருக்கும் வண்டுகள் வெளியே வந்துவிடும்.
Image credits: Getty
Tamil

வெயிலில் உலர்த்துங்கள்

அரிசியில் வண்டு, புழுக்களின் தொல்லை அதிகமாக இருந்தால், அதனை ஒரு துணியில் பரப்பி 2-3 மணி நேரம் நல்ல வெயிலில் வையுங்கள். வெப்பத்தை தாங்க முடியாமல் புழுக்கள் தானாகவே வெளியேறிவிடும்.

Image credits: pixabay

சாயங்காலம் கற்பூரம், கிராம்பு ஏத்துங்க.. அப்புறம் பாருங்க மேஜிக்கை!

Skincare Tips: இந்த ரகசியம் தெரிஞ்சா மேக்கப்பே தேவையில்லை!

Hemoglobin : வெறும் 7 நாட்களில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பது எப்படி?

புடவைக்கு இந்த பெரிய கம்மல் போட்டா செமயா இருக்கும்!