- Home
- Business
- Business Idea: பழைய பிளாஸ்டிக் டிரம் போதும்! லட்சங்களில் வருமானம் தரும் பிவிசி பைப் பிசினஸ் ஐடியா
Business Idea: பழைய பிளாஸ்டிக் டிரம் போதும்! லட்சங்களில் வருமானம் தரும் பிவிசி பைப் பிசினஸ் ஐடியா
Business Idea: தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால் சரியான ஐடியா இல்லாததால் பலர் பின்வாங்கி விடுகிறார்கள். அதே நேரத்தில், பிளாஸ்டிக் மறுசுழற்சி (Recycling) துறையில் PVC பைப் தயாரிப்பு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

பழைய டிரம் மறுசுழற்சி
பழைய பிளாஸ்டிக் டிரம், பிவிசி (PVC) ஸ்கிராப், ஃபேக்டரி கழிவுகள் போன்றவற்றை இந்த தொழிலுக்கு மூலப்பொருட்களாகப் பயன்படுத்துகிறார்கள். இவற்றை ஸ்கிராப் டீலர்கள் அல்லது தொழிற்சாலைகளிடமிருந்து வாங்கிக்கொள்ளலாம். இவற்றுடன், பைப்புக்கு நிறம் கொடுக்க கலர் மாஸ்டர்பேட்ச், ஸ்டெபிலைசர்கள், லூப்ரிகன்ட்கள், ஃபில்லர் பொருட்கள் மற்றும் சில பிராசஸிங் கெமிக்கல்களும் தேவைப்படும்.
இந்த கலவைதான் பைப்புக்கு உறுதியையும், நீடித்து உழைக்கும் தன்மையையும், நல்ல நிறத்தையும் கொடுக்கிறது. முதலில், சேகரித்த பழைய பிளாஸ்டிக் டிரம் அல்லது பிவிசி ஸ்கிராப்பை நன்றாக சுத்தம் செய்வார்கள். தூசி, மண் போன்றவற்றை நீக்கிய பிறகு, அவற்றை கிரஷர் மெஷினில் போட்டு சின்ன சின்ன துண்டுகளாக மாற்றுவார்கள்.
தயாரிப்பு முறையின் முதல் படி
இந்த துண்டுகளுடன் தேவையான நிறம் மற்றும் கெமிக்கல்களைக் கலப்பார்கள். பிறகு, இந்த கலவையை எக்ஸ்ட்ரூடர் பேரலில் போட்டு சூடுபடுத்துவார்கள். அதிக வெப்பத்தில் பிளாஸ்டிக் உருகி, நீளமான நூல் போல வெளியே வரும். இதை உடனடியாக சின்ன சின்ன துண்டுகளாக வெட்டுவார்கள். இவையே பிவிசி கிராநூல்ஸ் அல்லது பிளாஸ்டிக் பெல்லட்ஸ் எனப்படுகின்றன. பைப் தயாரிக்க இதுதான் மூலப்பொருள். தயாரான கிராநூல்ஸை மீண்டும் பைப் எக்ஸ்ட்ரூஷன் மெஷினில் போடுவார்கள்.
இந்த மெஷினில் அவை மறுபடியும் உருகி, ஒரு சிறப்பு அச்சு (Die) வழியாக வெளியே வரும்போது பைப் வடிவத்தைப் பெறும். பைப் வெளியே வந்தவுடன், அதை குளிர்விப்பதற்காக ஒரு தண்ணீர் தொட்டிக்குள் அனுப்புவார்கள். தண்ணீரால் குளிர்ச்சி அடையும்போது பைப் இறுகிவிடும். பின்னர், மற்றொரு மெஷின் உதவியுடன் பைப்பை முன்னோக்கி இழுப்பார்கள். கடைசியாக, தேவையான நீளத்திற்கு ஆட்டோமேட்டிக் கட்டர் மூலம் வெட்டுவார்கள். அதன் பிறகு, தரப் பரிசோதனைகள் செய்து மார்க்கெட்டுக்கு அனுப்புவார்கள்.
₹99, ₹999-லதான் ஏன் விலை முடிகிறது? பின்னாடி இருக்கும் சைக்காலஜி இதுதான்!
என்னென்ன மெஷின்கள் தேவை? முதலீடு எவ்வளவு?
ஒரு சிறிய பிவிசி பைப் தயாரிப்பு யூனிட் தொடங்க சில முக்கிய மெஷின்கள் தேவை. பிளாஸ்டிக் கிரஷர், மிக்சர் மெஷின், கிராநூல் தயாரிக்கும் மெஷின், பைப் எக்ஸ்ட்ரூஷன் மெஷின், கூலிங் வாட்டர் டேங்க், புல்லர் மெஷின், ஆட்டோமேட்டிக் கட்டர், ஏர் கம்ப்ரசர், மின்சார இணைப்பு போன்றவை முக்கியம். யூனிட்டின் திறனைப் பொறுத்து முதலீடு மாறும். ஒரு சிறிய யூனிட்டுக்கு சுமார் ₹15 லட்சம் முதல் ₹40 லட்சம் வரை முதலீடு தேவைப்படலாம். பெரிய பிளான்ட் அமைத்தால் முதலீடு இன்னும் அதிகரிக்கும்.
மார்க்கெட் வாய்ப்புகள்
விவசாயத்தில் போர்வெல் இணைப்புகள், சொட்டுநீர்ப் பாசனம், கட்டுமானத் துறை, கேபிள் டக்டிங் என பல தேவைகளுக்கு PVC பைப்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. எனவே, தரமான தயாரிப்புகளுக்கு மார்க்கெட்டில் நல்ல வாய்ப்புகள் உள்ளன. ஆனால், தரமான மூலப்பொருட்களைப் பயன்படுத்துவது, சரியான கெமிக்கல் கலவை, தரப் பரிசோதனை, அரசு அனுமதிகள் மற்றும் மார்க்கெட் தேவைக்கு ஏற்ப பல அளவுகளில் பைப் தயாரிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்து கொண்டே வருமானம் ஈட்ட நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு ஆகும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

