MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • TVS Price Hike: டிவிஎஸ் ஸ்கூட்டர் விலை திடீர் உயர்வு! எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி

TVS Price Hike: டிவிஎஸ் ஸ்கூட்டர் விலை திடீர் உயர்வு! எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி

TVS Price Hike: டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது. நிறுவனம் தனது ஐகியூப் மற்றும் ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பல்வேறு வேரியன்ட்களின் விலையை உயர்த்தியுள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Aug 04 2026, 05:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
டிவிஎஸ் ஸ்கூட்டர்கள் விலை அதிகரிப்பு
Image Credit : tvs

டிவிஎஸ் ஸ்கூட்டர்கள் விலை அதிகரிப்பு

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வரிசையில் இடம்பெறும் ஐகியூப் மற்றும் ஆர்பிட்டர் மாடல்களின் விலை திருத்தப்பட்டுள்ளது. ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, பல்வேறு வேரியன்ட்களுக்கு ரூ.500 முதல் ரூ.13,580 வரை விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது. புதிய விலைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஐகியூப் விலை உயர்வு
Image Credit : TVS

ஐகியூப் விலை உயர்வு

டிவிஎஸ் ஐகியூப் வரிசையில், 2.2 kWh பேட்டரி கொண்ட பேஸ் வேரியன்டின் விலை ரூ.500 உயர்ந்துள்ளது. 3.1 kWh வேரியன்டுக்கு ரூ.1,650, 3.5 kWh மாடலுக்கு ரூ.3,900, S 4.7 kWh வேரியன்டுக்கு ரூ.3,000 மற்றும் ST 5.3 kWh வேரியன்டுக்கு ரூ.10,400 வரை உயர்த்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரே மாதத்தில் 55,000 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்று புதிய சாதனை.. முழு லிஸ்ட் இதோ!

Related Articles

Related image1
TVS Motor: ஒரே மாதத்தில் 55,000 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்று புதிய சாதனை.. முழு லிஸ்ட் இதோ!
Related image2
PAYD Insurance: கார் அதிகமா ஓட்ட மாட்டீங்களா? PAYD பிளான்ல ஆயிரக்கணக்குல இன்சூரன்ஸ் பணத்தை மிச்சப்படுத்தலாம்!
35
டிவிஎஸ் ஆர்பிட்டர் ஸ்கூட்டர்
Image Credit : tvs

டிவிஎஸ் ஆர்பிட்டர் ஸ்கூட்டர்

இந்த மாற்றத்திற்குப் பிறகு, டிவிஎஸ் ஐகியூப்-ன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.1.15 லட்சமாகவும், டாப் வேரியன்டின் விலை ரூ.1.72 லட்சமாகவும் உயர்ந்துள்ளது. டிவிஎஸ்-ன் மற்றொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரான ஆர்பிட்டர் மாடலுக்கு குறிப்பிடத்தக்க விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பேஸ் V1 வேரியன்டுக்கு ரூ.7,000 மற்றும் டாப் வேரியண்டுக்கு ரூ.13,580 வரை விலை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

45
ஆர்பிட்டர் ஸ்கூட்டரின் புதிய விலை
Image Credit : Website/TVS

ஆர்பிட்டர் ஸ்கூட்டரின் புதிய விலை

இதன் மூலம் ஆர்பிட்டர்-ன் ஆரம்ப விலை ரூ.95,000 ஆகவும், உயர்நிலை வேரியன்டின் விலை ரூ.1.18 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகவும் உயர்ந்துள்ளது. சமீப காலமாக எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் நிலையில், டிவிஎஸ்-ன் இந்த விலை திருத்தம் வாடிக்கையாளர்களின் வாங்கும் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது கவனிக்க வேண்டிய அம்சமாக உள்ளது.

55
விலைப்பட்டியல்
Image Credit : TVS

விலைப்பட்டியல்

இருப்பினும், நிறுவனம் இந்த விலை உயர்வுக்கான காரணத்தை அதிகாரப்பூர்வமாக விளக்கவில்லை. இந்த விலை விவரங்கள் பல்வேறு ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. மாநிலம், நகரம் மற்றும் டீலர்ஷிப்பைப் பொறுத்து இறுதி ஆன்-ரோடு விலை மாறுபடலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவிஎஸ் ஐக்யூப்
மின்சார ஸ்கூட்டர்
வாகனம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
மாருதி விக்டோரிஸுக்கு செக் வைக்க ஹூண்டாய், ஹோண்டா, ரெனால்ட் களமிறக்கும் 3 புதிய SUV-கள்!
Recommended image2
TVS Motor: ஒரே மாதத்தில் 55,000 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்று புதிய சாதனை.. முழு லிஸ்ட் இதோ!
Recommended image3
Used Cars: மேனுவல் vs ஆட்டோமேட்டிக்: செகண்ட் ஹேண்ட் காரில் எது கெத்து? ரிப்போர்ட் சொல்வது என்ன?
Related Stories
Recommended image1
TVS Motor: ஒரே மாதத்தில் 55,000 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்று புதிய சாதனை.. முழு லிஸ்ட் இதோ!
Recommended image2
PAYD Insurance: கார் அதிகமா ஓட்ட மாட்டீங்களா? PAYD பிளான்ல ஆயிரக்கணக்குல இன்சூரன்ஸ் பணத்தை மிச்சப்படுத்தலாம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved