அச்சச்சோ..Google Pay, Phonepe யூஸ் பண்றீங்களா நீங்க ? இனிமே எல்லாமே கட்டணம் தான் !
கூகுள் பே, பேடிஎம் பேமெண்ட் பேங்க் ஆப், போன் பே, அமேசான் பே, ஆக்சிஸ் பேங்க்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்டவைகள் மூலம் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கூகுள்பே, போன்பே, பேடிஎம் போன்ற பணப் பரிவர்த்தனை செயலிகள் மூன்று வருடங்களுக்கு முன்பு டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகம் புழக்கத்தில் இருந்தன. ஆனால் தற்போது கிராமங்கள் வரையில் இச்செயலிகள் பரவியுள்ளது.
பெட்டிக்கடை, தெருவோரக் கடைகளில் இச்செயலிகள் மூலம் பணம் செலுத்துவதற்கான க்யூஆர் கோட் (QR Code) அட்டையை பார்க்க முடியும். இந்தச் செயலிகள் நம் அன்றாட பணப் பரிவர்த்தனை செயல்பாட்டை எளிதாக்கியது மட்டுமல்ல, இந்தியாவின் பணப் பரிவர்த்தனைக் கட்டமைப்பை அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. இதில் நாம் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இத்தகைய பரிவர்த்தனை முறையில் உலகின் முன்னோடி நாடு இந்தியா என்பதுதான்.
பல வளர்ந்த நாடுகளில் இன்னும் கார்டு மூலமான பரிவர்த்தனையே முதன்மையானதாக இருக்கிறது. எப்படி இந்தியா இத்தகையதொரு பரிவர்த்தனை கட்டமைப்பை உருவாக்கியது? ஒரே பதில், யுபிஐ. போன்பே, கூகுள்பே, பேடிஎம் போன்ற செயலிகள் இந்தியா உருவாக்கிய யுபிஐ அடிப்படையாகக்கொண்டு செயல்படுவதால் தான் அச்செயலிகளின் வழியே எளிதாக பரிவர்த்தனை மேற்கொள்ள முடிகிறது.
மேலும் செய்திகளுக்கு..முதல்வரை சந்தித்தது எம்.பி பதவிக்கு தானா ? ஓ.பி ரவீந்திரநாத் சொன்ன அதிர்ச்சி தகவல் !
இந்தியாவில் சுமார் 658 மில்லியன் இணைய பயனர்கள் மற்றும் சுமார் 1.2 பில்லியன் மொபைல் சந்தாரர்கள் இருக்கின்றனர்.மொத்த பரித்தவர்த்தனை எண்ணிக்கைளில் 64 சதவீதமும் தொகை மதிப்பில் 50 சதவீதமும் இந்த பரிவர்த்தனைகள் தான் செய்யப்பட்டிருக்கிறது.2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது அதன் பரிவர்த்தனைகளின் அளவும் மதிப்பும் இரண்டு மடங்கு அதிகமாகும்.
கூகுள் பே, பேடிஎம் பேமெண்ட் பேங்க் ஆப், போன் பே, அமேசான் பே, ஆக்சிஸ் பேங்க்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்டவைகள் மூலம் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய யுபிஐ பரிவர்த்தனை சேவையை பயன்படுத்த பயனருக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை. இதனால் தான் யுபிஐ சேவையை பெரும்பாலான மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ரிசர்வ் வங்கி யுபிஐ பரிவர்தனைகளுக்கு கட்டணங்கள் வசூலிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் முன்மொழிவில், ‘யுபிஐ என்பது ஐஎம்பிஎஸ் போன்றது. எனவே, ஐஎம்பிஎஸ் இல் உள்ள கட்டணங்களைப் போலவே யுபிஐ பணப்பரிவர்தனைகளுக்கு கட்டணங்கள் இருக்க வேண்டும். வெவ்வேறு தொகை வரம்புகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட கட்டணம் விதிக்கப்படலாம்’ என்று தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு..“பிரதமர் மோடி தான் முதலிடம் ! மற்ற பிரதமர்களுக்கு இடமே கிடையாது தெரியுமா !” வெளியான அதிர்ச்சி தகவல் !