gold rate today: தங்கம் விலை வீழ்ச்சி !இந்த வாரம் தங்கம் விலையை தீர்மானிக்கும் 5 காரணிகள்:இன்றைய நிலவரம் என்ன?
வாரத்தின் முதல்நாளான இன்று தங்கம் விலை சரிவுடன் தொடங்கியுள்ளது. தங்கம் கடந்த 5 நாட்கள் சரிந்த தங்கம் விலை சனிக்கிழமை மட்டும் சற்று உயர்ந்தது. இன்று மீண்டும் விலை குறைந்துள்ளது.
வாரத்தின் முதல்நாளான இன்று தங்கம் விலை சரிவுடன் தொடங்கியுள்ளது. தங்கம் கடந்த 5 நாட்கள் சரிந்த தங்கம் விலை சனிக்கிழமை மட்டும் சற்று உயர்ந்தது. இன்று மீண்டும் விலை குறைந்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராம் ஒன்றுக்கு 15 ரூபாயும், சவரனுக்கு 10 ரூபாயும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,830க்கும், சவரன் ரூ.38,640க்கும் விற்கப்பட்டது.
யுபிஐ பணப்பரிமாற்ற சேவைக்கு கட்டணம் கிடையாது.. மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்!
தங்கம் விலை திங்கள்கிழமை(இன்று) காலை மீண்டும் வீழ்ச்சி அடைந்தது. கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் சரிந்து, ரூ.4,815 ஆகவும், சவரனுக்கு ரூ.120 சரிந்து, ரூ.38,520ஆகவும் விற்கப்படுகிறது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4815ஆக விற்கப்படுகிறது.
தங்கம் விலை இரு வாரங்களாக சரிந்து வருகிறது. கடந்த 15ம் தேதி முதல் தங்கம் விலை சவரனுக்கு ரூ.700க்கும் மேல் சரிந்துள்ளது. இந்த வாரத்திலும் தங்கத்தின் விலை குறைவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
குறிப்பாக 5 காரணிகள் தங்கள் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
எல்ஐசி பாலிசிதாரர்களே நல்ல வாய்ப்பு ! காலாவதியாகிவிட்ட காப்பீட்டை புதுபிக்க சூப்பர் சான்ஸ்
1. வரும் 25ம் தேதி முதல் 27ம் தேதிவரை அமெரிக்க மத்திய வங்கியின் ஆண்டுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் வட்டி வீதம் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த கூட்டம் குறித்த எதிர்பார்ப்பு தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
2. தங்கம் விலையைத்தீர்மானிப்பதில் டாலர் இன்டெஸ்க் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த வாரத்தில் 108க்கு மேல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த உயர்வும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
3. அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கான ஜிடிபி விவரங்கள் இந்த வாரம் வெளியிடப்படுகின்றன. இந்த புள்ளிவிவரங்களும் தங்கம்விலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
4. அமெரிக்காவின் வர்த்தகப் புள்ளிவிவரங்கள், வர்த்தகச் சூழல் குறித்த விவரங்களும் இந்த வாரம் வெளியிடப்படுகின்றன. இது அமெரிக்க டாலரில் எந்த அளவுதாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்து தங்கத்தின் விலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
தொழிலதிபர் கெளவுதம் அதானிக்கு விஐபி 'Z' பிரிவு பாதுகாப்பு: மத்திய அரசு ஒப்புதல்
5. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் உற்பத்தி குறித்த விவரங்கள். அமெரிக்க வேலைவாய்ப்பு நிலவரம், வீடு விற்பனை குறித்த புள்ளிவிவரங்களும் இந்த வாரம் வெளியாகின்றன. இவை அனைத்தும் சர்வதேச சந்தையில் தங்கத்தினஅ விலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
வெள்ளி விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று 20 பைசா குறைந்து, ரூ.61.10 ஆகவும், கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.61,100க்கும் விற்கப்படுகிறது
- 22 carat gold rate in chennai today
- 22 carat gold rate today
- 22k gold price today
- 22k gold rate
- 24 carat gold rate today
- Chennai gold rate
- Gold rate today
- gold price
- gold price live
- gold price today
- gold rate
- gold rate in Chennai
- gold rate today
- gold rate today in Chennai
- gold today Chennai
- silver price
- silver price today
- silver rate
- silver rate today
- today gold price rate
- today gold rate 8 gram
- today gold rate in Chennai
- today gold rate in tamilnadu