எல்ஐசி பாலிசிதாரர்கள் தங்களின் காலாவதியாகிவிட்ட காப்பீட்டை மீண்டும் புதுப்பிக்க வாய்ப்பை எல்ஐசி வழங்கியுள்ளது.
எல்ஐசி பாலிசிதாரர்கள் தங்களின் காலாவதியாகிவிட்ட காப்பீட்டை மீண்டும் புதுப்பிக்க வாய்ப்பை எல்ஐசி வழங்கியுள்ளது.
நாட்டின் 75-வது சுதந்திரதினம் கொண்டாடப்படும் வேளையில் இந்த நல்ல வாய்ப்பை காப்பீடுதாரர்களுக்கு எல்ஐசி நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த வாய்ப்பு ஆகஸ்ட் 17ம் தேதிமுதல் அக்டோபர் 21ம் தேதிவரை இருக்கும்.
இது யுலிப் அல்லாத பாலிசிகளுக்கும் பொருந்தும். நீண்டகாலமாக ப்ரீமியம் செலுத்தாதவர்களுக்கு குறைந்த அளவிலான அபராததத்துடன் மீண்டும் பாலிசியை புதுப்பிக்கலாம். இந்த திட்டம் பாலிசி எடுத்த 5 ஆண்டுகளுக்குள் ஒரு ப்ரீமியம் மட்டும் செலுத்தி தொடர முடியாமல் போனவர்களுக்கு மட்டும் பொருந்தும் எல்ஐசி தெரிவித்துள்ளது.
தொழிலதிபர் கெளவுதம் அதானிக்கு விஐபி 'Z' பிரிவு பாதுகாப்பு: மத்திய அரசு ஒப்புதல்
அதிகபட்சமாக 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடி அல்லது ரூ.2,500 முதல் ரூ.3500 வரை தாமதக்கட்டணம் ப்ரீமியம் செலுத்தும் தொகைக்கு ஏற்ப வசூலிக்கப்படும். மைக்ரோ இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு 100 சவீதம் தாமதக்கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.
மருத்துவத் தேவைகளுக்கான பாலிசிகளுக்கு எந்தவிதமான தள்ளுபடியும் கிடையாது. யுலிப் பிளான்கள் தவிர, மற்ற பாலிசிகள் ப்ரீமியம் செலுத்தி பாதியில் நின்றுவிட்ட பாலிசிகல் இந்த திட்டத்தின் மூலம் மீண்டும் புதுப்பிக்கலாம்.
இதன்படி ரூ.ஒரு லட்சம் வரை ப்ரீமியம் வாங்கப்படுவதாக இருந்தால் தாமதக் கட்டணத்தில் 25 சதவீதம், அதிகபட்சமாக ரூ.2500 வரை தள்ளுபடி தரப்படும்.
புதிய மாருதி ‘மைலேஜ் அரசன்’ அல்டோ k10 கார்: ரூ.3.90 லட்சத்தில் அட்டகாச வசதிகள்
ரூ.100001 முதல் ரூ.3 லட்சம் வரை ப்ரீமியம் செலுத்துவதாக இருந்தால், தாமதக் கட்டணத்தில் 30 சதவீதம், அதிகபட்சமாக ரூ.3 ஆயிரம் வரை தள்ளுபடிவழங்கப்படும். ரூ.3 லட்சத்துக்கு மேல் ப்ரீமியம் செலுத்துவதாக இருந்தால், 30 சதவீதம் வரை தாமதக்கட்டணத்திலும், 30 சதவீதம் வரை தள்ளுபடியும் தரப்படும்.
