யுபிஐ பணப்பரிமாற்ற சேவைக்கு கட்டணம் கிடையாது.. மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்!
இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, யுபிஐ சேவை வசதி 2016ம் ஆண்டு ஏப்ரலில், அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது. அதன்படி, யுபிஐ மூலம் கூகுள்-பே மற்றும் போன்-பே வாயிலாக கட்டணமின்றி பரிவர்த்தனை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டது.
இந்தியாவில் சுமார் 658 மில்லியன் இணைய பயனர்கள் மற்றும் சுமார் 1.2 பில்லியன் மொபைல் சந்தாரர்கள் இருக்கின்றனர். மொத்த பரித்தவர்த்தனை எண்ணிக்கைளில் 64 சதவீதமும் தொகை மதிப்பில் 50 சதவீதமும் இந்த பரிவர்த்தனைகள் தான் செய்யப்பட்டிருக்கிறது.2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது அதன் பரிவர்த்தனைகளின் அளவும் மதிப்பும் இரண்டு மடங்கு அதிகமாகும்.
மேலும் செய்திகளுக்கு..தலையில் காயம்.. காண்டத்தை வைத்து கட்டு போட்ட வார்டு பாய் - அதிர்ச்சி சம்பவம்.!
கூகுள் பே, பேடிஎம் பேமெண்ட் பேங்க் ஆப், போன் பே, அமேசான் பே, ஆக்சிஸ் பேங்க்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்டவைகள் மூலம் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய யுபிஐ பரிவர்த்தனை சேவையை பயன்படுத்த பயனருக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை. இதனால் தான் யுபிஐ சேவையை பெரும்பாலான மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
மக்களின் அன்றாட பயன்பாடுகளில் ஒன்றாக மாறிப்போன, கூகுள் பே போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க தற்போது ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளது என்று தகவல் வெளியாகி இருந்தது. யுபிஐ பணப்பரிமாற்ற சேவைக்கு கட்டணம் விதிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்றும், ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளதாக வெளியான தகவலுக்கு நிதியமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு..ஜெயலலிதாவுக்கே எடப்பாடி துரோகம் செய்வார்.. சசிகலா நியாபகம் இருக்கா உங்களுக்கு? குமுறும் அதிமுக நிர்வாகி