தலையில் காயம்.. காண்டத்தை வைத்து கட்டு போட்ட வார்டு பாய் - அதிர்ச்சி சம்பவம்.!
தலையில் காயமடைந்த நபருக்கு ஆணுறையை வைத்து கட்டுப்போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், மொரீனாவில் உள்ள போர்சா என்ற சுகாதார மையத்துக்கு ஒரு பெண் தலையில் அடிபட்ட நிலையில் சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் ரத்தக் கசிவை நிறுத்துவதற்காக, அந்தப் பெண்ணின் தலையில் காண்டம் ரேப்பரை வைத்து கட்டியிருக்கின்றனர். அந்தப் பெண்ணுக்கு வலி அதிகமாக இருந்ததால் மொரேனாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.
அப்போது மருத்துவர்கள் அவருடைய தலையில் கட்டப்பட்டிருந்த கட்டை பிரித்து பார்த்தபோது தலையில் ரத்தக் கசிவை தற்காலிகமாக நிறுத்துவதற்காக காண்டம் ரேப்பரை வைத்திருப்பது தெரியவந்தது. பிறகு காயம் தங்க முடியாததால், உடனே வேறு மருத்துவமனைக்கு அதாவது மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்கள். அங்கு கட்டை பிரித்து பார்த்த போது தான் இந்த சம்பவம் வெளியே தெரிய வந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு..அச்சச்சோ..Google Pay, Phonepe யூஸ் பண்றீங்களா நீங்க ? இனிமே எல்லாமே கட்டணம் தான் !
இதுதொடர்பாக அந்த மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். அதில், 'அந்தப் பெண் ரேஷ்மா பாய் தர்ம்கரில் இருந்து வந்துள்ளார். டாக்டர் தர்மேந்திர ராஜ்பூத் அவசரப் பணியில் இருந்தார். வார்டு பாய் ஆனந்த் ராமிடம் டாக்டர் தர்மேந்திரா பருத்தித் திண்டுக்கு மேல் சில அட்டைகளை வைக்குமாறு அறிவுறுத்தினார்.
ஆனால் அவர் ஆணுறை பாக்கெட்டை வைத்திருந்தார். வேறு எந்த காரணமும் இல்லை' என்று கூறினார். இதை தொடர்ந்து, போர்சா சுகாதார மையத்தின் வார்டு பாய் மாநில சுகாதாரத் துறையால் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..வேறு நபருடன் உடலுறவு.. ஆண்களை முந்திய பெண்கள் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்