வேறு நபருடன் உடலுறவு.. ஆண்களை முந்திய பெண்கள் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
ஆண்களை விட பெண்களே அதிக அளவில் பிறருடன் உடலுறவு கொள்கிறார்கள் என்று தேசிய குடும்ப நல அமைப்பின் சமீபத்திய ஆய்வு கூறியிருக்கிறது.
1.1 லட்சம் பெண்கள் மற்றும் 1 லட்சம் ஆண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில், பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆண்களை விட பெண்கள் சராசரியாக பிறருடன் உடலுறவு கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் தங்கள் மனைவி அல்லது உடன் வாழ்ந்த ஒருவருடன் உடலுறவு கொள்ளும் ஆண்களின் சதவீதம் 4 சதவீதமாக உள்ளது.
இது பெண்களை விட 0.5 சதவீதம் அதிகம் ஆகும். இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பின்வருமாறு ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகர், ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக், மத்திய பிரதேசம், அசாம், கேரளா, லட்சத்தீவு, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகியவை ஆகும். ராஜஸ்தானில் தான் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு..நாம ஜெயிச்சிட்டோம்.. குஷியில் ஓபிஎஸ்” ஆடிப்போன எடப்பாடி.. அதிமுக அதோகதியா?
நகர்ப்புற பெண்களை விட கிராமப்புற பெண்கள் மற்றும் திருமணமாகாதவர்கள், விவாகரத்து செய்தவர்கள், விதவைகள் அல்லது பிரிக்கப்பட்டவர்கள் என பல தரப்பட்டவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கிடைத்த பதில்களின் அடிப்படையில் கடந்த 12 மாதங்களில் தாங்கள் 2 அல்லது அதற்கு மேற்பட்டவர்களுடன் உடலுறவு கொண்டதாக கூறி உள்ளனர்.
ஆனால், கருத்துக்கணிப்புக்கு முந்தைய 12 மாதங்களில், தங்கள் மனைவியோ அல்லது துணையாகவோ இல்லாத ஒருவருடன் உடலுறவு கொண்ட ஆண்களின் சதவீதம் 4 சதவீதமாக இருந்தது. பெண்களைப் பொறுத்தவரை, இந்த எண்ணிக்கை 0.5 சதவீதமாக இருந்தது.
இந்த தேசிய அறிக்கை சமூக - பொருளாதார மற்றும் பிற பின்னணி பண்புகள் மூலம் தரவை வழங்குகிறது, இது கொள்கை உருவாக்கம் மற்றும் பயனுள்ள திட்டத்தை செயல்படுத்துவதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு..அடுத்த ஆளுநர் ரஜினிகாந்த்.. பாஜக போட்ட ஸ்கெட்ச் - இதுதான் ரஜினி முடிவா ?