ஜெயலலிதாவுக்கே எடப்பாடி துரோகம் செய்வார்.. சசிகலா நியாபகம் இருக்கா உங்களுக்கு? குமுறும் அதிமுக நிர்வாகி
கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுகவில் ஒற்றைத் தலைமையை தேர்வு செய்வதற்காக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஓபிஎஸ்ஸும் அவரது ஆதரவாளர்களும் கலந்து கொள்ளவில்லை.இந்த நிலையில் வானகரத்தில் அதிமுக பொதுக் குழு கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது ஓபிஎஸ்ஸும் அவரது ஆதரவாளர்களும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது அந்த அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. இதனால் பூட்டை உடைத்து கொண்டு ஓபிஎஸ் தரப்பினர் உள்ளே சென்றனர். இதையடுத்து எடப்பாடி தரப்புக்கும் ஓபிஎஸ் தரப்புக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது.
இதில் பலர் காயமடைந்தனர். அங்கிருந்த ஓபிஎஸ், இபிஎஸ் பேனர்களை பரஸ்பரம் கிழித்தெறிந்தனர்.மேஜை, நாற்காலிகள் உடைக்கப்பட்டு அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது. ஜெயலலிதா இருந்திருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றிருக்குமா ? என்ற கேள்வி அதிமுக தொண்டர்களிடையே எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ் தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு..தலையில் காயம்.. காண்டத்தை வைத்து கட்டு போட்ட வார்டு பாய் - அதிர்ச்சி சம்பவம்.!
இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், 'ஒருங்கிணைப்பாளர் பதவியை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்திருக்கும் நிலையிலும் தனது சுயலாப நலத்திற்காக அந்தப் பதவி செல்லாது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார்.
தனது ஆதரவாளர்களை வைத்து பொதுக்குழு கூட்டுவதாக சொல்லி தன்னைத்தானே இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லுகிறார். திறந்த மனதோடு மீண்டும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார். ஆனால் அதனை எடப்பாடி பழனிச்சாமி தனது சுய நலத்திற்காக ஏற்க மறுத்துவிட்டார்.
மேலும் செய்திகளுக்கு..வேறு நபருடன் உடலுறவு.. ஆண்களை முந்திய பெண்கள் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
50 ஆண்டுகளாக இயங்கி வரும் அதிமுகவை சுமார் 4 ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருந்து விட்டு கட்சியை கைப்பற்ற திட்டமிடுகிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஓபிஎஸ் துரோகி என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். ஆனால் சசிகலாவின் காலில் விழுந்து பதவி பெற்ற எடப்பாடி பழனிச்சாமி தான் துரோகி. மூன்று முறை ஓபிஎஸ்க்கு முதலமைச்சர் பதவியை ஜெயலலிதா கொடுத்தார்.
மீண்டும் அந்தப் பதவியை திரும்ப ஒப்படைத்தார். ஆனால் தற்போது இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஜெயலலிதா முதலமைச்சர் பதவி கொடுத்திருந்தால் அவருக்கே இபிஎஸ் துரோகம் செய்திருப்பார். ஓபிஎஸ்க்கு மூன்று முறை கொடுத்ததை இபிஸ்க்கு ஒருமுறை கொடுத்திருந்தாலே ஜெயலலிதாவிடமே வேலையை காட்டியிருப்பார்’ என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு..அச்சச்சோ..Google Pay, Phonepe யூஸ் பண்றீங்களா நீங்க ? இனிமே எல்லாமே கட்டணம் தான் !