Asianet News TamilAsianet News Tamil

Gold Silver Rate Today: தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு! சவரன் ரூ.350க்குமேல் எகிறியது: நிலவரம் என்ன?

தங்கம் விலை வரலாறு காணாத வகையில் விலை இன்று உயர்ந்துள்ளது. சவரன் ரூ.42 ஆயிரத்து 350யைக் கடந்துள்ளது

Gold prices have reached an all-time high: check rate in chennai, kovai, vellore and trichy
Author
First Published Jan 14, 2023, 10:33 AM IST

தங்கம் விலை வரலாறு காணாத வகையில் விலை இன்று உயர்ந்துள்ளது. சவரன் ரூ.42 ஆயிரத்து 350யைக் கடந்துள்ளது

தங்கம் விலை இன்று கிராமுக்கு 46 ரூபாயும், சவரனுக்கு 368 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது. 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,250ஆகவும், சவரன், ரூ.42,000ஆகவும் இருந்தது.

Gold prices have reached an all-time high: check rate in chennai, kovai, vellore and trichy

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(சனிக்கிழமை) கிராமுக்கு 46 ரூபாய் உயர்ந்து ரூ.5,296ஆகவும், சவரனுக்கு 368 ரூபாய் அதிகரித்து ரூ.42 ஆயிரத்து 368 ஆக உயர்ந்துள்ளது கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,296க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலையால் இன்ப அதிர்ச்சி! இவ்வளவு குறைவா! வெள்ளி வீழ்ச்சி! இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை இந்த வாரத் தொடக்கத்தில் கிராம் ரூ.5,260 என்ற விலையில் தொடங்கியது, இன்று கிராமுக்கு ரூ.36 அதிகரித்து இதுவரையில்லாத வகையில் உச்சத்தை அடைந்துள்ளது. வரலாற்றில் முதல்முறையாக சவரன் ரூ.42 ஆயிரத்தை 2வது முறையாகத் தொட்டநிலையில் அதைவிட இன்று அதிகரித்து ரூ.42 ஆயிரத்து 369 என்ற அளவில் ஏற்றம் கண்டது. இந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 அதிகரித்துள்ளது. 

Gold prices have reached an all-time high: check rate in chennai, kovai, vellore and trichy

தங்கம் விலை 2வது நாளாகக் குறைவு! நடுத்தரக் குடும்பத்தினருக்கு நிம்மதி! இன்றைய நிலவரம்?

வெள்ளி விலையில் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.75.00ஆகவும்,  கிலோவுக்கு ரூ.10000 அதிகரி்த்து ரூ.75 ஆயிரமாகவும் ஏற்றம் கண்டுள்ளது. 

அமெரிக்காவில் பணவீக்கம் குறைந்ததையடுத்து, பெடரல் ரிசர்வ் வட்டிவீதத்தை அதிகமாக உயர்த்த வாய்ப்பில்லை. இதனால், பங்குப்பத்திரங்களில் முதலீடு செய்தவர்கள் லாபநோக்கம் கருதி, அதிலிருந்து முதலீட்டை எடுத்து தங்கத்தின் பக்கம் கவனத்தை திருப்புகிறார்கள். 

Gold prices have reached an all-time high: check rate in chennai, kovai, vellore and trichy

தங்கம் விலை மீண்டும் ரூ.42 ஆயிரத்தை தொட்டது: இன்றைய நிலவரம் என்ன

அதுமட்டுமல்லாமல் பண்டிகைக்காலம் என்பதாலும் தங்கம் விலை தொடர்ந்து வருகிறது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் உயரும் என்றுசந்தை வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்

Follow Us:
Download App:
  • android
  • ios