Asianet News TamilAsianet News Tamil

Gold,Silver Rate Today: தங்கம் விலையால் இன்ப அதிர்ச்சி! இவ்வளவு குறைவா! வெள்ளி வீழ்ச்சி! இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை கடந்த வாரத்திலிருந்து தொடர்ந்து அதிகரித்து வந்தநிலையில் இன்று குறைந்துள்ளது. இதனால் மீண்டும் சவரன் ரூ.42ஆயிரத்துக்கு கீழ் வந்துள்ளது.

Gold price has abruptly dropped : check rate in chennai, kovai, trichy and vellore
Author
First Published Jan 10, 2023, 10:16 AM IST

தங்கம் விலை கடந்த வாரத்திலிருந்து தொடர்ந்து அதிகரித்து வந்தநிலையில் இன்று குறைந்துள்ளது. இதனால் மீண்டும் சவரன் ரூ.42ஆயிரத்துக்கு கீழ் வந்துள்ளது.

தங்கம் விலை இன்று கிராமுக்கு 23 ரூபாயும், சவரனுக்கு 184 ரூபாயும் விலை குறைந்துள்ளது. 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,260ஆகவும், சவரன், ரூ.42,080ஆகவும் இருந்தது.

Gold price has abruptly dropped : check rate in chennai, kovai, trichy and vellore

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செவ்வாய்கிழமை) கிராமுக்கு 23 ரூபாய் சரிந்து ரூ.5,237ஆகவும், சவரனுக்கு 184 ரூபாய் குறைந்து ரூ.41 ஆயிரத்து 896ஆக குறைந்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,237க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு! சவரனுக்கு ரூ.250 அதிகரிப்பு: இன்றைய நிலவரம்

வெள்ளி விலையில் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று 1.20 பைசா  வீழ்ச்சி அடைந்து, ரூ.73.70ஆக சரிந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1,200 குறைந்து, ரூ.73,700 ஆக உயர்ந்துள்ளது.

தங்கம் விலை புத்தாண்டு தொடக்கத்தில் இருந்து வேகமாக அதிகரித்து வந்தது, கடந்த 10 நாட்களுக்குள் சவரனுக்கு ரூ.1000 வரை அதிகரி்த்தது. இது தங்கம் வாங்க நினைப்போருக்கும், நடுத்தரக் குடும்பத்தினருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது. 

Gold price has abruptly dropped : check rate in chennai, kovai, trichy and vellore

இதில் உச்சகட்டமாக சவரன் ரூ.42 ஆயிரத்தை நேற்று எட்டியது. இந்நிலையில், அமெரி்க்க பெடரல் ரிசர்வ் கூட்டத்தில் இன்று வட்டிவீதம் குறித்து அறிவிக்கப்படுவதையடுத்து, தங்கத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் காத்திருப்பதால், தங்கம் விலை திடீரென இன்று குறைந்தது

தங்கம் விலை எகிறியது! சவரன் ரூ.42 ஆயிரமாக உயர்வு: இன்றைய நிலவரம் என்ன

பண்டிகை காலத்தில் இயல்பாகவே தங்தத்தின் விற்பனையும், விலையும் உயரும். அதற்கு ஏற்றார்போல், தொடர்ந்து அதிகரி்த்து வந்தது. ஆனால், பெடரல் ரிசர்வ் முடிவைப் பொறுத்து தங்கத்தின் விலையில் அடுத்தும் வரும் நாட்களில் மாற்றம் இருக்கும் எனத் தெரிகிறது. 


 

Follow Us:
Download App:
  • android
  • ios