தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் குறைந்துள்ளது.  இது மிடில்கிளாஸ் மக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. இது மிடில்கிளாஸ் மக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தங்கம் விலை இன்று கிராமுக்கு 7 ரூபாயும், சவரனுக்கு 56 ரூபாயும் விலை குறைந்துள்ளது. 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,237ஆகவும், சவரன், ரூ.41,896ஆகவும் இருந்தது.

தங்கம் விலையால் இன்ப அதிர்ச்சி! இவ்வளவு குறைவா! வெள்ளி வீழ்ச்சி! இன்றைய நிலவரம் என்ன?

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(புதன்கிழமை) கிராமுக்கு 7 ரூபாய் சரிந்து ரூ.5,230ஆகவும், சவரனுக்கு 56 ரூபாய் குறைந்து ரூ.41 ஆயிரத்து 840ஆக குறைந்துள்ளது.

கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,230க்கு விற்கப்படுகிறது.

கடந்த இரு நாட்களில் தங்கம் கிராமுக்கு 30 ரூபாயும், சவரனுக்கு 240 ரூபாயும் குறைந்துள்ளது ஆறுதல் அளிக்கும் அம்சமாக நகைப்பிரியர்களுக்கு அமைந்துள்ளது.

தங்கம் விலை எகிறியது! சவரன் ரூ.42 ஆயிரமாக உயர்வு: இன்றைய நிலவரம் என்ன

வெள்ளி விலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று 30 பைசா அதிகரித்து, ரூ.74.00ஆக உயர்ந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.300 அதிகரித்து, ரூ.74,00 ஆக உயர்ந்துள்ளது.