தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஊசலாட்டத்தில் இருந்த நிலையில், இன்று விலை அதிகரித்து, மீண்டும் ரூ.42 ஆயிரத்தை தொட்டுள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஊசலாட்டத்தில் இருந்த நிலையில், இன்று விலை அதிகரித்து, மீண்டும் ரூ.42 ஆயிரத்தை தொட்டுள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 14 ரூபாயும், சவரனுக்கு 112 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,236ஆகவும், சவரன், ரூ.41,888ஆகவும் இருந்தது.

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வெள்ளிக்கிழமை) கிராமுக்கு 14 ரூபாய் உயர்ந்து ரூ.5,250ஆகவும், சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து ரூ.42 ஆயிரமாக உயர்ந்துள்ளது
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,250க்கு விற்கப்படுகிறது.
கடந்த 3 நாட்களாக தங்கம் கிராமுக்கு 6 ரூபாய் வித்தியாச்திலேயே சென்று வந்தநிலையில் இன்று 14 ரூபாய் உயர்ந்து சவரன் மீண்டும் ரூ.42 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. கடந்த 9ம் தேதி இதே போல் தங்கம் சவரன் ரூ.42 ஆயிரத்தை எட்டியநிலையில் பின்னர் குறைந்தது.
வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. வெள்ளி கிராம் ஒன்று ரூ.74.00ஆகவும், கிலோ ரூ.74 ஆயிரமாகவும் இருக்கிறது

அமெரிக்காவில் டிசம்பர் மாத சில்லறைப் பணவீக்கம் எதிர்பார்த்த அளவைவிட குறைந்துள்ளது. இதனால், பணவீக்கத்தைக் குறைக்கும் பெடரல் ரிசர்வ் வட்டிவீதத்தை அதிகமாக உயர்த்தாமல் தளர்வு காட்டும் எனத் தெரிகிறது. வரும் கூட்டத்திலும் வட்டிவீத உயர்வு பெரிதாக இருக்காது என நம்பப்படுகிறது.
இதன் காரணமாக, பங்குப்பத்திரங்களில் முதலீடு செய்தவர்கள் லாபநோக்கம் கருதி, அதிலிருந்து முதலீட்டை எடுத்து தங்கத்தின் பக்கம் கவனத்தை இனிமேல் திருப்பலாம். இதனால் வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் உயரும் என்றுசந்தை வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்
