தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது என அண்ணாமலையிடம் கேளுங்கள்- தமிழிசை அதிரடி

தமிழக மக்கள் நல்லவர்களை தயவு செய்து அடையாளம் கண்டு கொள்ளுங்கள். எங்களைப் போன்றவர்கள் நிர்வாக திறமை உள்ளவர்கள் என தமிழிசை சவுந்திர்ராஜன் தெரிவித்துள்ளார்.

Tamilisai said to ask Annamalai regarding law and order in Tamil Nadu

திறமையானவர்களை அடையாளம் காணுங்கள்

கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  தேர்தலில் உங்களால் ஆயிரம் ஓட்டு கூட வாங்க முடியாது, 2000 ஓட்டு கூட வாங்க முடியாதா.? என பேஸ்புக்கில் எழுதுகிறார்கள் அது யார் தவறு.எனவே மக்கள் திறமையானவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். ஆளுனர்களை  ஜனாதிபதியால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், மாநில தலைவர்களின் திறமையை ஜனாதிபதி அடையாளம் கண்டு கொள்கிறார்கள். தமிழக மக்கள் அந்த தலைவர்களின் திறமையை அடையாளம் காணவில்லையென தெரிவித்தார்.

Latest Videos

ஜெயலலிதா என்னை அச்சுறுத்திய போது எனக்கு துணையாக இருந்தவர் கருணாநிதி..! கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு

Tamilisai said to ask Annamalai regarding law and order in Tamil Nadu

அண்ணாமலையிடம் கேளுங்கள்

தமிழக மக்களால் எங்களை பாராளுமன்ற உறுப்பினர் ஆக்க முடியவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் ஆக்கியிருந்தால் எங்களை அமைச்சர் ஆக்கி இருப்பார்கள். தமிழக மக்கள் நல்லவர்களை தயவு செய்து அடையாளம் கண்டு கொள்ளுங்கள். எங்களைப் போன்றவர்கள் நிர்வாக திறமை உள்ளவர்கள் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்திற்கு அதிகளவில் வட இந்தியாவில் இருந்து வருவதற்கு யார் வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்ற  சிந்தனை வந்தால் அதைப் பற்றி பேசுவோம் என தெரிவித்தார். இறுதியாக தமிழக சட்டம் ஒழுங்கு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்வியை அண்ணாமலையிடம் கேட்கலாம் நான் ஆளுநர் என தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை நடந்தது எப்படி.? மகளிர் ஆணையம் நேரில் விசாரணை- விரைவில் அறிக்கை தாக்கல்

vuukle one pixel image
click me!
vuukle one pixel image