vuukle one pixel image

நீதிக்காக போராடும் நாய்; புதுமையான கதைக்களத்துடன் உருவான கூரன் படத்தின் டிரைலர் இதோ

Ganesh A  | Published: Feb 17, 2025, 7:27 PM IST

புதுமுக இயக்குனர் நிதின் வேமுபதி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் கூரன். இப்படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஒய் ஜி மகேந்திரன், இந்திரஜா ரோபா சங்கர், ஜார்ஜ் மரியான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். நீதிக்காக போராடும் ஒரு நாயின் கதையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தின் உணர்வுப்பூர்வமான டிரைலர் வெளியாகி உள்ளது.

மார்டின் தன்ராஜ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை கனா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற பிப்ரவரி 28ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இன்று சென்னையில் இப்படத்தில் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என நம்பிக்கை தெரிவித்தனர்.