
இந்தியர்கள் காலம் காலமாக உணவில் சேர்த்து வரும் மிக முக்கியமான பொருள் மிளகு. இது சளி, இருமலுக்கு மிகவும் சிறந்த மருந்து. நோய் எதிர்ப்ப சக்தியை உடலில் அதிகரிக்க செய்யும் என்பது உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மிளகு அனைவருக்கும் நன்மையை வழங்காது என்பது உங்களுக்கு தெரியுமா?
மருத்துவ பொருளாகவும், வீட்டு சமையலறையில் முக்கிய மசாலா பொருளாகவும் இருக்கும் மிளகு இதய நோய், புற்று நோய் ஆகியவற்றை சரி செய்வதில் முக்கிய பங்கு வகிப்பதுடன், வயதான தோற்றம் ஏற்படுவதை குறைக்கக் கூடியது. ஆனால் சிலர் கண்டிப்பாக கருப்பு மிளகை தவிர்க் வேண்டும் என டாக்டர்கள் சொல்கிறார். யாரெல்லாம் கருப்பு மிளகு சாப்பிடக் கூடாது? என்ன காரணத்திற்காக சாப்பிடக் கூடாது என்பதை வாங்க தெரிந்த கொள்ளலாம்.
கர்ப்பிணி பெண்கள் :
கர்ப்பணிப் பெண்கள் கருப்பு மிளகை சாப்பிடக் கூடாது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும் இதை தவிர்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது. கர்ப்ப காலத்தில் அதிகமாக மிளகு சாப்பிட்டால் அது கருப்பை சுருங்க செய்து விடும். இது குறை பிரசவம் ஏற்பட செய்து விடும். அதோடு பிரசவத்தின் போது பலவிதமான சிக்கல்களையும் ஏற்படுத்தி விடும்.
அல்சர் உள்ளவர்கள் :
அல்சர் எனப்படும் வயிற்றுப் புண் பிரச்சனை உள்ளவர்கள் மிளகு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வயிற்று புண்கள் காரணமாக வயிற்று வலி, குமட்டல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும். ஏற்கனவே அமில சுரப்பு தன்மை அதிகரிப்பால் அவதிப்படுபவர்கள் மிளகு சாப்பிட்டால் அது இன்னும் அதிகரித்து விடும். மிளவில் வயிற்றுப் புண்கள் மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் பிரச்சனைகளை தூண்டும் காரணிகள் அதிகம் உள்ளன.
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் :
சிறுநீரகம் அல்லது கல்லீரல் நோய் உள்ளவர்கள் மிளகு சாப்பிடக் கூடாது. சிறுநீரகம், கல்லீரல் சரியாக செயல்பட முடியாமல் பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பவர்கள், கருப்பு மிளகை சாப்பிடுவதால் அவற்றை வேகமாக செல்பட வைக்கும் அல்லது அழுத்தத்தை கொடுக்கும். ஜீரண சக்தியை தூண்டும் வகையில் மிளகு செயல்படுவதால் அது அவர்களுக்கு உடல் பிரச்சனையை மேலும் அதிகமாக்கி விடும்.
அலர்ஜி உள்ளவர்கள் :
மிளகு சாப்பிடுவதால் தும்மல், அரிப்பு அல்லது செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் அதை தவிர்த்து விட வேண்டும். மிளகு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்தாலும் சிலருக்கு அதுவே எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடும். இவர்களை மிளகை தவிர்த்து விடுவது நல்லது.
இரைப்பை குடல் நோயாளிகள் :
குடல் நோய்க்குறி, அழற்சி குடல் நோய், இரைப்பை உணவுக்குழாய் பிரச்சனை உள்ளவர்கள் மிளகை தவிர்த்து விட வேண்டும். இல்லையென்றால் நிலைமை மோசமாக்கி விடும். தோல் அரிப்பு, அலர்ஜி உள்ளவர்களும் மிளகு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.