தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம்: 200 நிறுவனங்கள் பங்கேற்பு

Published : Feb 17, 2025, 08:28 PM IST
தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம்: 200 நிறுவனங்கள் பங்கேற்பு

சுருக்கம்

வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு! தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தூத்துக்குடி வ.உ.சி. கலைக் கல்லூரி ஆகியவை இணைந்து மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன.

எப்போ? எங்கே?

பிப்ரவரி 22, 2025 காலை 9 மணிக்கு தூத்துக்குடி வ.உ.சி. கலைக் கல்லூரியில் இந்த முகாம் நடைபெறும்.

யார் யாரெல்லாம் கலந்துக்கலாம்?

8-ஆம் வகுப்பு முதல் முதுநிலை பட்டதாரி, B.E., Diploma, Nursing, ITI படித்தவர்கள் உட்பட அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.

என்ன சிறப்பு?

  • 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
  • தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்களும் கலந்து கொள்கின்றன.

எப்படி தெரிஞ்சுக்கிறது?

இந்த முகாம் பற்றிய கூடுதல் தகவல்களை அறிய Thoothukudi Employment Office என்ற Telegram Channel-ல் இணையலாம். Telegram செயலியை பதிவிறக்கம் செய்து Thoothukudi Employment Office என Search செய்து Channel-ல் Join செய்வதன் மூலம் தகவல்களைப் பெறலாம். மேலும், deo.tut.jobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 0461-2340159 என்ற தொலைபேசி எண் மூலமாகவும் தகவல்களைப் பெறலாம்.

முக்கியமான தகவல்:

வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் TamilNadu Private Job Portal (www.tnprivatejobs.tn.gov.in) -ல் பதிவு செய்ய வேண்டும். வேலைநாடுநர்கள் (JOB SEEKERS) Candidate Login-லும், வேலையளிப்பவர்கள் (EMPLOYER) Employer Login-லும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

​​​​​​​இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டாலும், வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் .க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Job Alert: 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.! அரசு வேலை காத்திருக்கு! டோன்ட் மிஸ்
Business: முத்தான மூன்றே விஷயங்கள் போதும்.! நீங்களும் ஆகலாம் அம்பானி.!