Asianet Tamil News highlights புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ள செங்கோல் இரவு 7 மணிக்கு பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பிரதமர் மோடி ஆதீனங்களிடம் ஆசி பெற்றார்.

10:40 PM (IST) May 27
"இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் - செங்கோல். தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி" என நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அத்துடன் #தமிழன்டா என்ற ஹேஷ்டேகையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.
10:33 PM (IST) May 27
நாளை புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ள செங்கோல் இரவு 7 மணிக்கு பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பிரதமர் மோடி ஆதீனங்களிடம் ஆசி பெற்றார்.
செங்கோலை ஒப்படைத்த ஆதீனங்களிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி
07:19 PM (IST) May 27
கிம் ஜாங் உன்னின் சர்வாதிகார ஆட்சி நடைபெறும் வட கொரியாவில் வீட்டில் பைபிள் வைத்திருந்தற்காக பிறந்து 2 மாதமே ஆன குழந்தைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவில் 2 மாத கைக்குழந்தைக்கு ஆயுள் தண்டனை! வீட்டில் பைபிள் இருந்ததுதான் குற்றமாம்!
05:09 PM (IST) May 27
பாஜகவின் அவசரச் சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆரை இன்று ஹைதராபாத்தில் சந்தித்தார்.
04:28 PM (IST) May 27
அதிமுகவுக்கு வீழ்ச்சி என்பதே கிடையாது. மீண்டும் ஆட்சியில் அமரும் நேரம் நெருங்கிவிட்டது என்று அதிமுக மாஜி அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
04:01 PM (IST) May 27
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த முத்தமிழ்ச் செல்விக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
03:35 PM (IST) May 27
புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவையொட்டி, அந்தக் கட்டட உருவம் பொறிக்கப்பட்ட 75 ரூபாய் சிறப்பு நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது.
03:10 PM (IST) May 27
வருகின்ற ஜூன் 2023ல் வங்கிகள் 12 நாட்களுக்கு மூடப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
02:28 PM (IST) May 27
யூடியூபர் இர்பானுக்கு சொந்தமான பென்ஸ் கார் மோதியதில் மறைமலை நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். யூடியூபர் இர்பான் கார் விபத்து
02:08 PM (IST) May 27
ஓட்டுவேட்டைக்கு சிதம்பரம் கோயிலும் தொகுதியும் வேண்டும் வெற்றிக்கு பிறகு திராவிடமும் பிறமதங்களை உயர்த்தி பிடிக்கும் போலி மதசார்பின்மை வேண்டும் என்பது நிறம் மாறும் உயிரினத்தைவிட மோசமான செயல் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
02:08 PM (IST) May 27
மிக எளிதாக சரி செய்து விடக் கூடிய குறைகளை காரணம் காட்டி, இவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்தால் அது தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வியை வழங்குவதில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
01:50 PM (IST) May 27
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் தீபாவளி ரேஸில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லியோ vs கேப்டன் மில்லர்
01:29 PM (IST) May 27
தாட்கோ மூலம் எச்.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் பட்டப்படிப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12:49 PM (IST) May 27
ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங் அமைப்பை தடை செய்தால் காங்கிரஸ் கட்சியை சாம்பலாக்குவோம் என்று பாஜக சவால் விடுத்துள்ளது.
11:59 AM (IST) May 27
இந்த ஆண்டின் பருவமழை காலத்தில் இந்தியாவில் இயல்பான மழைப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
11:57 AM (IST) May 27
Powassan virus என்று அழைக்கப்படும் கொடிய வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
11:56 AM (IST) May 27
வருகிற ஜூன் 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
11:03 AM (IST) May 27
ஹிஜாப் அணியக்கூடாது என்று அரசு பெண் மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகிக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
11:01 AM (IST) May 27
கோவில் பட ஷூட்டிங்கின் போது படப்பிடிப்பிற்கு லேட் ஆக வந்த சிம்புவை இயக்குனர் ஹரி சரமாரியாக சாடியதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
10:47 AM (IST) May 27
நம் இந்திய நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
10:02 AM (IST) May 27
தமிழ்நாடு முழுக்க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை நேற்று ரெய்டு நடத்தியது.
08:30 AM (IST) May 27
கரூர் மாநகராட்சியின் துணை மேயர் வீட்டுக்குச் சீல் வைத்த வருமான வரித்துறை அதிகாரிகளின் வாகனத்தை திமுகவினர் முற்றுகையிட்டு மாட்டுவண்டியை குறுக்கே விட்டு தர்ணாவில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
07:33 AM (IST) May 27
அமைச்சர் செஞ்சி மஸ்தானின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் பல ஆண்டுகள் இருப்பதாகவும் தவறான நபர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் திமுக தலைமைக்கு புகார் சென்றதை அடுத்து காஜா நஜீரின் பதவி பறிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
07:07 AM (IST) May 27
வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது வாகனங்கள் தாக்கப்பட்டது கண்டனத்திற்குரியது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.