இதெல்லாம் வெட்கக்கேடு.. திரையில் நடப்பதெல்லாம் நிஜத்தில் கடக்குது.. கொந்தளிக்கும் ஓபிஎஸ்..!
அமைச்சருக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரிச்சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது வாகனங்கள் தாக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது வாகனங்கள் தாக்கப்பட்டது கண்டனத்திற்குரியது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்கள் மட்டுமின்றி அவரது சகோதரர், நண்பர்கள், ஆதரவாளர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இதையும் படிங்க;- அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த செந்தில் கார்த்தியேன் வீட்டிலும் ரெய்டு..! யார் இவர் தெரியுமா?
இந்நிலையில், கரூரில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்த வந்தனர். அப்போது, சோதனைக்கு வந்த அதிகாரிகளை திமுகவினர் முற்றுகையிட்டனர். அத்துடன் அதிகாரிகளின் கார் கண்ணாடியையும் உடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது திமுக தொண்டர் ஒருவரை வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு ஓபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- சோதனைகளை பார்த்து திமுக என்றைக்குமே அஞ்சியது இல்லை.. இதை திசை திருப்பவே ரெய்டு.. ஆர்.எஸ்.பாரதி பகீர் தகவல்.!
இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- டாஸ்மாக் கடைகளில் ஒரு மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலிக்கப்படுகிறது என்ற புகார் பரவியதையடுத்து, அமைச்சருக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரிச்சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது வாகனங்கள் தாக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
திரையில் நடப்பதெல்லாம் நிஜத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது. அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பது வெட்கக்கேடானது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கள் பணியை தொடர்ந்து மேற்கொள்ள ஏதுவாக அவர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன் என ஓபிஎஸ் கூறியுள்ளார்.
- AIADMK
- IT raids across Minister Senthil Balaji 40 Locations
- IT raids across Tamil Nadu
- IT raids in DMK Minister Senthil Balaji Locations
- Income Tax Department Raids in Tamilnadu
- Income Tax Raids in Senthil Balaji Places
- Income Tax Raids in Senthil Balaji residences
- Minister Senthil Balaji
- supporter of Minister Senthil Balaji
- O Panneerselvam