ஜவஹர்லால் நேரு நினைவு தினம்: கொட்டும் மழையில் ராகுல் காந்தி மரியாதை - பிரதமர் மோடி ட்வீட்
நம் இந்திய நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்தியாவின் முதல் பிரதமர், நவீன இந்தியாவின் சிற்பி என்னும் பெருமைகளுக்கு உரியவர் பண்டித ஜவஹர்லால் நேரு. 1947 ஆம் ஆண்டு முதல் தன் வாழ்நாளின் இறுதியான 1964 ஆம் ஆண்டு வரை பிரதமராகப் பணியாற்றியவர். பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
நம் இந்திய நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் நினைவு நாள் இன்று. இதனையொட்டி, இன்று டெல்லியில் அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மலர் தூவி மரியாதை செலுத்தும்போது அவரது உதவியாளர் அவருக்கு குடை பிடித்துக்கொண்டு நின்றார். பிறகு அடுத்து வந்த ராகுல் காந்தி மழையில் நனைந்தபடியே மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளில், நமது முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க..வெயில் கொளுத்துதே.! வெப்பத்தை போக்க வரும் வருண பகவான் - எப்போ தெரியுமா?