வெயில் கொளுத்துதே.! வெப்பத்தை போக்க வரும் வருண பகவான் - எப்போ தெரியுமா?
சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஜூன் 5 வரை மட்டுமே வெயில் கொளுத்தும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 4 ஆம் தேதி முதல் இந்த மாதம் 28 ஆம் தேதி வரை கத்தரி வெயில் வாட்டி வதைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலம் தொடங்கிய நிலையில் மக்கள் இந்த கத்தரி வெயிலால் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் 105 அல்லது 106 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்து வருகிறது.
குறிப்பாக காலை 11 மணிக்கு மேல் இருந்து, மாலை 5 மணி வரை வெயில் கொளுத்துகிறது என்றே சொல்லலாம். தமிழகத்தில் வளிமண்டல கீழக்கு, மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் கூட நல்ல வெயில் தெரிவதாக கூறுகிறார்கள்.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் குட் நியூஸ் சொல்லியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நுங்கம்பாக்கத்தில் 104 டிகிரி பாரன்ஹீட் இருந்தது. அது போல் சென்னை புறநகர் பகுதிகளில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. அதாவது 105 டிகிரி பாரன்ஹீட். வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் இன்று வெயில் வாட்டி எடுத்தது.
இந்த வெயில் வரும் ஜூன் 5ஆம் தேதியுடன் முடிந்துவிடும். அதாவது வடதமிழகமான கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், சென்னை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 5 வரை மட்டுமே வெயில் இருக்கும் என தெரிவித்துள்ளார். அது போல் பெங்களூர், கிருஷ்ணிகிரி, தருமபுரி மாவட்டங்களில் மழை தொடரும் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க..சென்னை - இலங்கைக்கு சூப்பரான கப்பல் பயணம்.. ஒரு டிக்கெட் எவ்வளவு தெரியுமா?