Asianet News TamilAsianet News Tamil

எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழ் பெண்.. சாதனை படைத்த பெண்மணிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த முத்தமிழ்ச் செல்விக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

first Tamil woman muthamilselvi to reach the highest peak in the world Mount Everest
Author
First Published May 27, 2023, 3:57 PM IST

விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டியைச் சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வி. 38 வயதாகும் இவர் கணவர் மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வருகிறார். தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் இவருக்கு எவரெஸ்ட் மலைச் சிகரத்தின் உச்சியை தொட வேண்டும் என்ற சிறு வயதில் இருந்தே ஆசை இருந்தது.

first Tamil woman muthamilselvi to reach the highest peak in the world Mount Everest

இதற்கு அவர்களின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவே, அதற்கான பயிற்சியை மேற்கொண்ட அவர் தனது விருப்பத்தை தமிழ்நாடு அரசிடம் தெரிவித்து நிதி உதவி வழங்க கோரினார். அதன்பேரில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கினார். விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்தார்.

இதையும் படிங்க..ஜூன் 2ம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.. முழு விபரம்

first Tamil woman muthamilselvi to reach the highest peak in the world Mount Everest

கடந்த ஏப்ரல் 2ம் தேதி சென்னையிலிருந்து காட்மாண்டு சென்றார். 5ம்தேதி கேம்பிற்கு பயணம் தொடங்கினார். 19ம் தேதி லோபுச் பகுதி உயரத்தை (20075 அடி – 6119 – மீட்டர் உயரம்) அடைந்தார். மே 18ம் தேதி மவுண்ட் எவரெஸ்டுக்கு பயணத்தை தொடங்கினார். 23ம் தேதி மவுண்ட் எவரெஸ்ட் பகுதியை வெற்றிகரமாக அடைந்தது. 24ம் தேதி கேம்ப்-2க்கு வந்தார். இதுகுறித்து, முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘எவரெஸ்ட் உச்சியைத் தொட்டுத் திரும்பியுள்ள சாதனைப் பெண்மணி முத்தமிழ்ச் செல்விக்கு வாழ்த்துகள்’’ என்று பதிவிட்டுள்ளார்.

சாதனை படைத்த முத்தமிழ்ச்செல்வியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். மேலும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இதையும் படிங்க..ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கி விடுமுறை.. தமிழகத்தில் எத்தனை நாள் தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios