ஆர்.எஸ்.எஸ் உடன் கைகோர்த்த திமுக.. நாகை உத்தரபிரதேசத்தில் இருக்கா.? திமுகவை வெளுத்த சீமான்

ஹிஜாப் அணியக்கூடாது என்று அரசு பெண் மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகிக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Is DMK ruling Tamil Nadu Or BJP says naam tamilar katchi Seeman question

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் அன்புச்சகோதரி ஜன்னத் அவர்களை கடந்த 24ஆம் தேதி இரவுநேரப் பணியின்போது அப்பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் மருத்துவமனையில் ஹிஜாப் அணியக்கூடாது என்று மிரட்டியுள்ளதோடு, ஹிஜாப்பாய் கழற்ற வேண்டும் என்று கூறி பணி செய்யாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறதா? அல்லது உத்தரபிரதேசத்தில் இருக்கிறதா? தமிழ்நாட்டை ஆள்வது திமுகவா? அல்லது பாஜகவா? என்று சந்தேகப்படும் அளவுக்கு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் இந்துத்துவ அமைப்புகளின் மதவெறிச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதையும் படிங்க..சென்னை - இலங்கைக்கு சூப்பரான கப்பல் பயணம்.. ஒரு டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

Is DMK ruling Tamil Nadu Or BJP says naam tamilar katchi Seeman question

மதவெறியர்களின் மனிதவெறுப்புச் செயல்களை தடுத்து நிறுத்தாமல், அதற்கு துணைபோகும் திமுக அரசின் ஆர்எஸ்எஸ் ஆதரவு வன்மையான கண்டத்திற்குரியது. உணவு, உடை, வழிபாடு உள்ளிட்டவை அடிப்படை தனிமனித உரிமையாகும். அதில் தலையிடுவதென்பது அருவறுக்கத்தக்க மனித வெறுப்பின் உச்சமாகும். வட இந்தியாவிலும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் மட்டுமே நிகழ்ந்த அத்தகைய மதவெறுப்பு கொடுஞ்செயல்கள் தற்போது தமிழ்நாட்டிலும் தொடங்கியிருப்பது வெட்கக்கேடானது.

என்ஐஏ கொடுஞ்சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்தது, நீண்டகால இசுலாமிய சிறைவாசிகள் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது, ஆர்எஸ்எஸ் சாகா வகுப்புகளை அனுமதித்தது, பாஜகவின் கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்துவது, இசுலாமியர் மீதான வெறுப்பை விதைக்கும் திரைப்படங்களுக்கு பாதுகாப்பளிப்பது, மாட்டுக்கறி உணவிற்கு தடைவிதிப்பது என்று இசுலாமியர்களுக்கு எதிராக திமுக அரசு எடுத்துச் செல்ல தடைவிதிக்கப்பட்டது. முக்கிய காரணமாகும்.

Is DMK ruling Tamil Nadu Or BJP says naam tamilar katchi Seeman question

இந்துத்துவத்திற்கு ஆதரவான இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் பாஜகவின் பினாமி அரசாகவே திமுக அரசு செயல்படுவதையே வெளிப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி அரசு அலுவலகத்திற்குள் புகுந்து அரசு அலுவலரைக் கொலை செய்தது, அரசு மருத்துமனைக்குள் புகுந்து அரசு மருத்துவரை மிரட்டுவதனால் சமூக விரோதிகளின் வன்முறை வெறியாட்டங்கள் தமிழ்நாட்டில் எந்த அளவுக்குச் சீர்குலைந்துள்ளன என்பதைக் காட்டுகிறது. ஆகவே, அடிப்படை மனித உரிமைக்கு எதிராக மதவெறியுடன் இழிசெயலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி புவனேஷ்ராமிற்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க..Gold Rate Today : அடிச்சது ஜாக்பாட்.! நகை வாங்க சரியான நேரம் இது - எவ்வளவு தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios