செங்கோலை ஒப்படைத்த ஆதீனங்களிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி
நாளை புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ள செங்கோல் இரவு 7 மணிக்கு பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பிரதமர் மோடி ஆதீனங்களிடம் ஆசி பெற்றார்.
நாளை புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ள செங்கோல் இரவு 7 மணிக்கு பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பிரதமர் மோடி ஆதீனங்களிடம் ஆசி பெற்றார். நாளை நடைபெறும் திறப்பு விழாவில் தமிழகத்தில் இருந்து 25 ஆதினங்கள் பங்கேற்க இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இன்று பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்து உரையாடினர். மதுரை, தருபுரம் ஆதீனங்கள் சார்பில் பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
விழாவின்போது பிரதமர் மோடி தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட செங்கோலை, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நிறுவுவார். 1947ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து இந்தச் செங்கோலைப் பெற்றுக்கொண்டுதான் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தியா சுதந்திரம் பெற்றதை அறிவித்தார்.
பிரம்மாண்டமான புதிய நாடாளுமன்றத்தை கட்டி முடிக்க எத்தனை கோடி செலவானது?
இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டடம், பிரதமர் நரேந்திர மோடியால், நாளை நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். மோடி தலைமையிலான பாஜக அரசின் ஒன்பது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம், திறக்கப்படுகிறது.
பிரம்மாண்டம்...பிரம்மாண்டம்...புதிய நாடாளுமன்றத்தின் சிறப்பு வீடியோ வைரல்!!
நரேந்திர மோடி ஒன்பது ஆண்டுகளுக்கு முன் மே 26, 2014 அன்று பிரதமராகப் பதவியேற்றார். தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ள நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் 970 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
இந்த நான்கு மாடிக் கட்டிடத்தில் 1,224 எம்பிக்கள் தங்கும் வசதி உள்ளது. இது உணவகம், வாகன நிறுத்துமிடம், பெரிய அரசியலமைப்பு மண்டபம் எனப் பல பகுதிகளைக் கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் உள்ள ஊழியர்கள் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT) மூலம் வடிவமைக்கப்பட்ட புதிய சீருடையை அணிந்து பணியாற்றுவார்கள்.
புதிய கட்டமைப்பில் மூன்று வாசல்கள் உள்ளன. அவை கியான் துவார், சக்தி துவார் மற்றும் கர்மா துவார் என்று அழைக்கப்பட்டுகின்றன. மேலும் எம்.பி.க்கள், விஐபிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு தனித்தனி வாயிலகள் உள்ளன.
செங்கோல் குறித்து காங். விமர்சனம்… மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி!!