செங்கோல் குறித்து காங். விமர்சனம்… மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி!!
செங்கோலை நேருவின் கைத்தடி என காங்கிரஸ் குறிப்பிட்டு அவமதித்து விட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
செங்கோலை நேருவின் கைத்தடி என காங்கிரஸ் குறிப்பிட்டு அவமதித்து விட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றம் கட்டிடத்தை பிரதமர் மோடி வரும் 28 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழகத்தின் கலை பொக்கிஷம் ஒன்றும் அதில் இடம் பெற இருக்கிறது. இந்த நிலையில், செங்கோல் குறித்து புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ஆதினங்களால் செங்கோல் சுதந்திரம் பெற்ற சமயத்தில் முதல் பிரதமர் நேருவிடம் கொடுக்கப்பட்டது உண்மைதான். ஆனால் அது மவுண்ட் பேட்டனிடம் கொடுக்கப்பட்டு அவரிடம் இருந்து நேருவிடம் கொடுக்கப்பட்டதா?
இதையும் படிங்க: பிரம்மாண்டம்...பிரம்மாண்டம்...புதிய நாடாளுமன்றத்தின் சிறப்பு வீடியோ வைரல்!!
அதிகாரம் மாறுவதற்கான அடையாளமாக செங்கோல் கொடுக்கப்பட்டதா? என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. வாட்ஸ் அப் பல்கலைக்கழகத்தை வைத்துக் கொண்டு பாஜக வரலாற்று பிழை செய்கிறது என்று விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பதிவில், செங்கோலை நேருவின் கைத்தடி என காங்கிரஸ் குறிப்பிட்டு அவமதித்து விட்டது. காங்கிரஸ் கட்சிக்கு இந்திய சம்பிராதாயங்கள் மீது நம்பிக்கை கிடையாது.
இதையும் படிங்க: புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா : புதிய 75 ரூபாய் நாணயத்தை வெளியிட உள்ள மத்திய அரசு.. என்ன ஸ்பெஷல்?
எனவே தான் செங்கோல் அதிகார மாற்றத்தின் அடையாளமாக மவுண்ட் பேட்டனிடம் கொடுத்து வாங்கப்பட்டதா? என்பதற்கு ஆதாரம் இல்லை என்ற சந்தேகங்களை காங்கிரஸ் கட்சி கிளப்புகிறது. இதுபோன்ற சந்தேகங்களை கிளப்புவது காங்கிரஸ் கட்சியின் வழக்கம். ஆதீனத்தின் வரலாற்றை போலி என தெரிவிப்பது காங்கிரசின் நடத்தையை காட்டுகிறது. திருவாடுதுறை ஆதீனத்தை காங்கிரஸ் அவமதித்து விட்டது என்று தெரிவித்துள்ளார்.