பிரம்மாண்டம்...பிரம்மாண்டம்...புதிய நாடாளுமன்றத்தின் சிறப்பு வீடியோ வைரல்!!

புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி வரும் மே 28ஆம் தேதி திறந்து வைக்கிறார். இந்த நாடாளுமன்றத்தின் சிறப்பு வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Exclusive visuals of the new Parliament Building Viral Video

இந்தக் கட்டடம் 150 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுட்காலம் கொண்டதாகவும், பூகம்பத்தை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் கட்டடக்கலை பாணிகளை உள்ளடக்கியதாக இந்த நாடாளுமன்றம் இருக்கும். மக்களவை மற்றும் மாநிலங்களவை பெரிய இருக்கைகளை கொண்டிருக்கும். 

புதிய வளாகத்தில் மக்களவையில் 888 பேர் அமர முடியும். ஆனால் பழைய மக்களவையில் 543 பேர் மட்டுமே அமைய முடியும். மாநிலங்களவையில் 384 பேர் அமர முடியும். ஆனால், பழைய மாநிலங்களவையில் 245 பேர் மட்டுமே அமர முடியும். இரண்டு அவைகளிலும் சேர்த்து மொத்தம் 1,272 பேர் அமரலாம்.  

நாடாளுமன்றக் கட்டடம் ரூ.971 கோடி பட்ஜெட்டில் கட்டப்பட்டுள்ளது.  டாடா நிறுவன குழுமம் இந்தக் கட்டடத்தை கட்டியது. 

Exclusive visuals of the new Parliament Building Viral Video

புதிய நாடாளுமன்றக் 64,500 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. முக்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.  இந்தக் கட்டடம் `சென்ட்ரல் விஸ்டா' என்ற சிறப்பு பெயரிலும் அழைக்கப்படுகிறது. மக்களவைக் கட்டடம் தேசியப் பறவையான மயிலை கருப்பொருளாகக் கொண்டும், மாநிலங்களவை தேசிய மலரான தாமரையைக் கருப்பொருளாகக் கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

Exclusive visuals of the new Parliament Building Viral Video

முக்கிய ராஜபாதையின் குறுக்கே மூன்று சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் இரு பக்கங்களிலும் 16 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 

புதிய நாடாளுமன்றத்தில் 'செங்கோல்' அமைக்கப்பட இருக்கிறது. மக்களவையில் சபாநாயகரின் இருக்கைக்கு அருகே இந்த செங்கோல் நிறுவப்படுகிறது. இது தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட செங்கோல் ஆகும். வெள்ளியால் ஆன இந்த செங்கோல் மீது தங்க மூலாம் பூசப்பட்டுள்ளது.  உம்மிடிபங்காரு நகைக்கடையினர் இந்த செங்கோலை தயாரித்துக் கொடுத்து இருந்தனர் என்பது சிறப்பாகும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios