நந்தியை வழிபடுபவர்கள் ஓட்டு தேவையில்லை கூற தைரியம் இருக்கா? திருமாவை லெப்ட் ரைட் வாங்கிய இந்து முன்னணி..!

பிரச்சாரத்தின்போது சிரத்தையோடு சிதம்பரம் கோயிலுக்கு சென்று பரிவட்டம் எல்லாம் கட்டிகொண்டு விழுந்து வணங்கினார் அப்போது நந்தியும் சிதம்பரம் கோயிலும் மத அடையாளமாக தெரியவில்லையா? 

Kadeswara Subramaniam slams thirumavalavan

ஓட்டுவேட்டைக்கு சிதம்பரம் கோயிலும் தொகுதியும் வேண்டும் வெற்றிக்கு பிறகு திராவிடமும் பிறமதங்களை உயர்த்தி பிடிக்கும் போலி மதசார்பின்மை வேண்டும் என்பது நிறம் மாறும் உயிரினத்தைவிட மோசமான செயல் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார். 

இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- நந்தி சின்னம் இருப்பதால் எதிர்க்கிறோம் புதிய மக்களவை திறப்பு விழாவில் பங்குபெறவில்லை திருமாவளவன் கூறியுள்ளார். திருமாவளவன் அவர்கள் தமிழர்கள் இந்துக்கள் அல்ல சைவர்கள் என மிக சமீபகாலத்தில்தான் முழங்கினார். அவரின் முழக்கபடி பார்த்தால் சைவத்தின் அடையாளம் நந்திதேவன்/நந்தி சிலை ஆனால் அது மதம் சார்ந்தது என்று தற்போது எதிர்க்கிறார். சைவத்தின் தலைமை பீடமாக விளங்கும் சிதம்பரம் சிவாலயம் இடம்பெற்றுள்ள மக்களவை தொகுதியில்தான் இவர் போட்டியிட்டு வென்றிருக்கிறார்.

Kadeswara Subramaniam slams thirumavalavan

 அந்த வகையில் தன் தொகுதியின் பிரதான அடையாளமான நந்தியை இவர்தன் உயர்த்தி பிடித்திருக்க வேண்டும் சொந்தம் கொண்டாடியிருக்கவேண்டும் தேர்தல் பிரச்சாரத்தின்போது சிரத்தையோடு சிதம்பரம் கோயிலுக்கு சென்று பரிவட்டம் எல்லாம் கட்டிகொண்டு விழுந்து வணங்கினார் அப்போது நந்தியும் சிதம்பரம் கோயிலும் மத அடையாளமாக தெரியவில்லையா? இவர் வெற்றி பெற்ற சிதம்பரம் தொகுதியின் பெயரே மத அடையாளம் தானே? திருமாவளவன் மட்டுமல்ல யார் புறக்கணிக்கனித்தாலும் இனி இந்த மண்ணின் புராதன அடையாளமான நந்தி எப்போதும் மக்களவையில் பிரதானமாக வீற்றிருக்க போகிறார் ஆகவே திருமாவளவன் இனி மக்களவை பக்கமே செல்லமாட்டாரா? எப்போது ராஜினமா செய்ய போகிறார்? 

Kadeswara Subramaniam slams thirumavalavan

சைவ அடையாளம் நந்தியை எதிர்பதன் மூலம் தன்னை திராவிட மாடலாக பறைசாற்றிகொள்லும் இவர் நந்தியை வழிபடும் பக்தர்களின் வாக்கு வேண்டாம் என்று கூறும் திண்மையும் திராணியும் இருக்கிறதா? ஆக திராவிட மாடல் என்பது இந்த மண்ணின் மான்பையும் பெருமையையும் மறைத்து இறக்குமதி கலாச்சாரத்தை முன்னிறுத்துவது என்பது இதன் மூலம் தெளிவாகிவிட்டது. ஓட்டுவேட்டைக்கு சிதம்பரம் கோயிலும் தொகுதியும் வேண்டும் வெற்றிக்கு பிறகு திராவிடமும் பிறமதங்களை உயர்த்தி பிடிக்கும் போலி மதசார்பின்மை வேண்டும் என்பது நிறம் மாறும் உயிரினத்தைவிட மோசமான செயல். 

Kadeswara Subramaniam slams thirumavalavan

ஓட்டு வங்கி அரசியலுக்காக தமிழக மண்ணின் பெருமையை பறைசாற்றும் பாராளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள மறுக்கும் திருமாவளவன் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்க சிதம்பரம் தொகுதி மக்கள் வலியுறுத்த வேண்டும் என காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios