Asianet News TamilAsianet News Tamil

கரூர் துணை மேயர் வீட்டுக்கு சீல்! திமுகவினர் செய்த காரியத்தால் வேறு வழியில்லாமல் சீலை அகற்றிய ஐடி அதிகாரிகள்.!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்கள் மட்டுமின்றி அவரது சகோதரர், நண்பர்கள், ஆதரவாளர்கள் மற்றும் டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

Income tax officials sealed Karur Deputy Mayor house
Author
First Published May 27, 2023, 8:24 AM IST

கரூர் மாநகராட்சியின் துணை மேயர் வீட்டுக்குச் சீல் வைத்த வருமான வரித்துறை அதிகாரிகளின் வாகனத்தை திமுகவினர் முற்றுகையிட்டு மாட்டுவண்டியை குறுக்கே விட்டு தர்ணாவில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்கள் மட்டுமின்றி அவரது சகோதரர், நண்பர்கள், ஆதரவாளர்கள் மற்றும் டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க;- சோதனைகளை பார்த்து திமுக என்றைக்குமே அஞ்சியது இல்லை.. இதை திசை திருப்பவே ரெய்டு.. ஆர்.எஸ்.பாரதி பகீர் தகவல்.!

Income tax officials sealed Karur Deputy Mayor house

இந்நிலையில் கரூர் ராயனூர் தீரன் நகரில் உள்ள துணை மேயர் தாரணி சரவணன் வீட்டுக்கு வருமான வரித்துறை சென்றனர். அப்போது, வீட்டில் யாரும் இல்லாததால் திரும்பி வந்த அவர்கள் மீண்டும் இரவு அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போதும் கரூர் துணை மேயர் வீடு பூட்டி இருந்ததால், அந்த வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

Income tax officials sealed Karur Deputy Mayor house

இதனை கண்டித்து துணை மேயரின் ஆதரவாளர்கள், வருமான வரித்துறை அதிகாரிகளின் வாகனங்களை முற்றுகையிட்டு அதிகாரிகளின் கார் செல்ல முடியாதபடி, மாட்டுவண்டியை குறுக்கே நிறுத்திய போராட்டம் நடத்தினர். தொடர் போராட்டத்தால், துணை மேயர் வீட்டிற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க;-  கரூரில் வருமான வரித்துறையினரின் கார்களை அடித்து உடைத்த செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள்.! திரும்பி சென்ற அதிகாரிகள்

Follow Us:
Download App:
  • android
  • ios