விஜய் படத்துக்கு ஆப்பு வைக்க முடிவெடுத்த தனுஷ்.. தீபாவளி ரேஸில் இருந்து கேப்டன் மில்லர் விலகியது இதற்குத்தானா?
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் தீபாவளி ரேஸில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாத்தி திரைப்படம் பிளாகபஸ்டர் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. வாத்தி படத்தின் வெற்றிக்கு பின்னர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் ஓரிரு வாரத்தில் முடிவடைந்துவிடும் என்பதால், அப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளும் விரைவில் வெளியாக உள்ளன. அதன்படி வருகிற ஜூன் மாத இறுதியில் தனுஷ் பிறந்தநாள் வருவதால், அன்று கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... மல்யுத்த வீராங்கனைகளுக்கு குரல்கொடுத்த நீங்க.. வைரமுத்து பற்றி பேசாதது ஏன்? கமலிடம் சின்மயி கேட்ட நறுக் கேள்வி
கேப்டன் மில்லர் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த படக்குழு, தற்போது அந்த முடிவில் இருந்து பின்வாங்கி உள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி கேப்டன் மில்லர் திரைப்படத்தை தீபாவளிக்கு முன்னதாகவே, அதாவது அக்டோபர் மாதமே ரிலீஸ் செய்ய உள்ளதாக அதன் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் சமீபத்தில் தெரிவித்துள்ளார். அதுவும் பண்டிகள் நாளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதை வைத்து பார்க்கும் போது அக்டோபர் மாதம் ஆயுத பூஜை பண்டிகை தான் வருகிறது. அந்த விடுமுறை நாளில் விஜய்யின் லியோ படம் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவித்துவிட்டனர். தற்போது அப்படத்துக்கு போட்டியாக கேப்டன் மில்லர் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள தகவல் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதன்மூலம் லியோ படத்தின் வசூலுக்கு பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ரிஸ்க் எடுக்குறதுலாம் ரஸ்க் சாப்பிடுறமாதிரி... ராதிகா - வடிவேலு இணைந்து வெளியிட்ட ஜாலி ரீல்ஸ் வீடியோ இதோ