Published : Mar 17, 2023, 07:14 AM ISTUpdated : Mar 17, 2023, 07:14 PM IST

Asianet Tamil News Live: உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம்!!

சுருக்கம்

அருணாசலப்பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ மேஜர் ஜெயந்த் குடும்பத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ. 20 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

 Asianet Tamil News Live: உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம்!!

02:59 PM (IST) Mar 17

வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை.. தமிழக அரசு அறிவிப்பு - முழு விபரம் உள்ளே

அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

மேலும் படிக்க

02:36 PM (IST) Mar 17

உதயநிதியின் ‘கண்ணை நம்பாதே’... முழு விமர்சனம் இதோ

மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், சதீஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கண்ணை நம்பாதே படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

02:26 PM (IST) Mar 17

அருமையான வாய்ப்பு.. 35 சதவீத மானியத்துடன் வாகனம் வாங்க கடனுதவி.. முழு விபரம் உள்ளே

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35 சதவீதம் மானியத்துடன் வாகன கடன் உதவிகள் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

01:45 PM (IST) Mar 17

இரண்டாக பிரியும் ஆப்பிரிக்க கண்டம்.. புதிதாக உருவாகும் கடல் - யாரும் பார்த்திராத அதிசய நிகழ்வு

எத்தியோப்பியா பாலைவனத்தில் நிலப்பிரிவு ஏற்பட்டு உள்ளது. இது விரைவில் கடலாக மாறக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் படிக்க

12:58 PM (IST) Mar 17

CM MK STALIN : பெண் காவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட நவரத்தின அறிவிப்புகள் - முழு விபரம்

பெண் காவலர்களுக்கு 9 முக்கிய வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் மு.க ஸ்டாலின்.

மேலும் படிக்க

12:07 PM (IST) Mar 17

8ம் வகுப்பு படித்தால் போதும்.. மாதம் 50 ஆயிரம் சம்பளத்தில் காத்திருக்கிறது அரசு வேலை - முழு விபரம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

11:32 AM (IST) Mar 17

ரூ.70,500 கோடி மதிப்பில் ஆயுதங்கள் கொள்முதல்.. மத்திய அரசு அனுமதி

70,500 கோடி மதிப்பிலான ஆயுதங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு  அனுமதி அளித்துள்ளது.

மேலும் படிக்க

10:27 AM (IST) Mar 17

Gold Rate Today : ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம்..இன்றைய தங்கம் & வெள்ளி நிலவரம் என்ன?

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏறியும், இறங்கியும் வருகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை என்ன என்பதை பார்க்கலாம்.

மேலும் படிக்க

09:34 AM (IST) Mar 17

TN Rain: மக்களே உஷார்.. தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!!

இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

09:32 AM (IST) Mar 17

ரோபோ சங்கருக்கு என்னாச்சு? லேட்டஸ்ட் போட்டோ பார்த்து ஷாக்கான ரசிகர்கள்- எப்படி இருந்த மனுஷன், இப்படி ஆகிட்டாரே

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது படங்களில் காமெடியனாக கலக்கிக் கொண்டிருக்கும் ரோபோ சங்கர், திடீரென உடல் எடை குறைந்துள்ளதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப் போய் உள்ளனர். மேலும் படிக்க

09:15 AM (IST) Mar 17

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு.! வெளிநாட்டு நிபுணர்கள் குழு ஆய்வு வேண்டும் -கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் பதில்

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து வெளிநாட்டு நிபுணர்கள் கொண்ட குழு அமைத்து அணை பாதுகாப்பு சட்டம் 2021ன் கீழ் வரும் வழிகாட்டு நெறிமுறைகள் படி ஆய்வு நடத்த கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 

மேலும் படிக்க..

09:12 AM (IST) Mar 17

இந்தியாவிலேயே முதன்முறை.. பிரம்மாண்டமாக நடந்த பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் - குவிந்த பக்தர்கள்

தி.நகரில் கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் இன்று (மார்ச் 17) வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மேலும் படிக்க

08:54 AM (IST) Mar 17

நீதிமன்றத்தில் சரண் அடைந்த அதிமுக மாஜி மந்திரி..! நிலத்தை மிரட்டி வாங்கிய வழக்கால் சிக்கல்

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் வயதான தம்பதியினரின் நிலத்தை மிரட்டி வாங்க முயன்ற வழக்கில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் புத்தி சந்திரன் உதகையில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

மேலும் படிக்க..

08:24 AM (IST) Mar 17

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உட்பட 2,000 பேர் மீது வழக்குப்பதிவு.. காவல்துறை அதிரடி.. அதிமுகவினர் அதிர்ச்சி

அமமுக நிர்வாகி ராஜேஸ்வரன் வீடியோ எடுத்து எடப்பாடி பழனிசாமியை துரோகத்தின் அடையாளம் என விமர்சித்தார். இதனால் அவரை, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உட்பட சிலர் தாக்கினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

மேலும் படிக்க

08:04 AM (IST) Mar 17

கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கணவன்.. வீடியோ எடுத்த மனைவி.. என்ன நடந்தது.?

கர்ப்பிணியை ஆண் ஒருவர் மனைவி துணையுடன் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

08:02 AM (IST) Mar 17

டிடிவி தினகரனோடு கைகோர்த்த ஓபிஎஸ் அணி..! தேனியில் ஒன்றினைந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

ஓ பன்னீர்செல்வம் ,தினகரன், சசிகலா ஆகியோர் இணைந்து செயல்பட வேண்டும்,வரும் காலங்களில் அதிமுக அமமுக ஒருங்கிணைந்து செயல்பட போகிறது ஆகவே அமமுக வினருடன் இணைந்து போராட்டம் நடத்தி உள்ளதாக  ஓபிஎஸ் அணி ஆதரவு மாவட்ட செயலாளர் சையதுகான் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

07:58 AM (IST) Mar 17

ஆளுங்கட்சி என்ற மிதப்பா? அத்துமீறிய செயல்! இதை ஏத்துக்கவே முடியாது!திமுகவுக்கு எதிராக கொதிக்கும் கூட்டணி கட்சி

திமுகவினர் இடையேயான மோதலில் காவல் நிலையத்தில் புகுந்து தாக்கிய செயல் கண்டனத்துக்குரியது என திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

07:58 AM (IST) Mar 17

நான் திரும்பவும் சொல்கிறேன்.. இதெல்லாம் நல்லதுக்கு இல்லை.. பாஜகவை எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.!

திமுக மீது மக்கள் எதிர்ப்பு அலை நிலவி வருவதாகவும், அது விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். நடைபெறவுள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக மகத்தான வெற்றி பெறும். திமுக நிச்சயம் மண்ணைக் கவ்வும் என்றார். பொதுச்செயலாளர் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும், விரைவில் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு அதிமுக தலைமையிடம் இருந்து வரும். 

மேலும் படிக்க


More Trending News