நான் திரும்பவும் சொல்கிறேன்.. இதெல்லாம் நல்லதுக்கு இல்லை.. பாஜகவை எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.!
துக்கம் தொண்டையை அடைக்கும் அளவிற்கு திருச்சி சிவா சோகமாக பேசியிருக்கிறார். திமுகவில் கோஷ்டி பூசல் என்பது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அது திருச்சி மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவா வீட்டின் மீதான தாக்குதலுக்கு ஓர் எடுத்துக்காட்டு என்றார்.
திமுகவில் கோஷ்டி பூசல் என்பது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அது திருச்சி மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவா வீட்டின் மீதான தாக்குதலுக்கு ஓர் எடுத்துக்காட்டு என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்;- திமுக மீது மக்கள் எதிர்ப்பு அலை நிலவி வருவதாகவும், அது விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். நடைபெறவுள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக மகத்தான வெற்றி பெறும். திமுக நிச்சயம் மண்ணைக் கவ்வும் என்றார். பொதுச்செயலாளர் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும், விரைவில் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு அதிமுக தலைமையிடம் இருந்து வரும்.
இதையும் படிங்க;- முன்னாள் முதல்வருக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை.! திமுக அரசை விளாசும் பொள்ளாச்சி ஜெயராமன்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது அடியோடு கேட்டு விட்டது. பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளில் கொலை கொள்ளை பற்றிய செய்திகள் தான் வருகிறது என்றும், செய்தித்தாள்களில் பாதி செய்திகள் கொலை கொள்ளை பற்றிய செய்திகள் தான் வருகின்றன என்றார். தமிழகத்தில் ரவுடிகள் சாம்ராஜ்யம் தான் நடக்கிறது. தமிழகத்தில் கட்சியும் ஸ்டாலின் இடமில்லை ஆட்சியும் ஸ்டாலினிடம் இல்லை என்றார்.
மேலும், துக்கம் தொண்டையை அடைக்கும் அளவிற்கு திருச்சி சிவா சோகமாக பேசியிருக்கிறார். திமுகவில் கோஷ்டி பூசல் என்பது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அது திருச்சி மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவா வீட்டின் மீதான தாக்குதலுக்கு ஓர் எடுத்துக்காட்டு என்றார். தமிழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினருக்கே பாதுகாப்பு இல்லை. அப்படினா சாமானியனின் நிலை என்னவாகும். குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல தமிழகம் ஸ்டாலின் கையில் சிக்கிக் கொண்டு தவிக்கிறது என ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க;- 8 தோல்வி நாயகன் எடப்பாடியே.. கையெழுத்தால் பதவி பெற்ற தறுதலையே.. இபிஎஸ்க்கு எதிராக வைரலாகும் போஸ்டர்..!
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை சீர் கெட்டுள்ளது. 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வை எழுதவில்லை என்பது வருத்தமான செய்தி. அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக, ஒன்றரை கோடி தொண்டர்களை வழிநடத்துபவர் எடப்பாடி பழனிசாமி. அவருடைய உருவப்படத்தை எரிப்பது என்பது கண்டனத்திற்குரிய விஷயம். உணர்ச்சிவசப்படும் தொண்டர்களை கட்டுப்படுத்தும் தகுதி தலைவருக்கு இருக்க வேண்டும். பாஜகவினரைப் போல் அதிமுகவினரும் ஆவேசப்பட்டிருந்தால் என்ன ஆயிருக்கும்?
நாங்கள் சொன்னபிறகு இபிஎஸ் உருப்படம் எரித்தவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு உடனே அவரை கட்சியில் மீண்டும் ஏன் சேர்த்தீர்கள். எதற்கு இந்த கண்துடைப்பு நடவடிக்கை? இந்த செயல் கண்டிக்கத்தது. நான் திரும்பவும் சொல்கிறேன். கொழுந்துவிட்டு எரிகின்ற தீயில் எண்ணெய்யை ஊற்றாதீர்கள், அதுநல்லதல்ல.தமிழக உரிமைகள் பறிபோனபொழுது திமுக இதுவரை எந்த உரிமைக்கும் குரலும் கொடுத்ததில்லை. மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியுடன் பலமுறை கூட்டணியில் இருந்த திமுக, தமிழர்களின் உரிமைகள் எதை பெற்று தந்துள்ளது என கேள்வி ஜெயக்குமார் எழுப்பினார்.