8 தோல்வி நாயகன் எடப்பாடியே.. கையெழுத்தால் பதவி பெற்ற தறுதலையே.. இபிஎஸ்க்கு எதிராக வைரலாகும் போஸ்டர்..!
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளதால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால், பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கமே உள்ளனர்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பல்வேறு மாவட்டங்களில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர் ஓட்டி வரும் சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளதால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால், பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கமே உள்ளனர். நீதிமன்ற உத்தரவுகள் மாறி மாறி வருவதால் இந்த பிரச்சனைக்கு இன்னும் முடிவுக்கு வராமல் உள்ளது.
இந்நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் போஸ்டர்கள் ஓட்டி தங்களின் எதிர்ப்புகளை காட்டி வருகின்றனர். இது தொடர்பான போஸ்டர்கள் சமூகவலைததளங்களில் வைரலாகி வருகிறது.
வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி
அந்த போஸ்டரில்
எட்டு தோல்வி நாயகன் எடப்பாடியே!
தங்கமகன் OPS
கையெழுத்தால் பதவி பெற்ற தறுதலையே
கழகத்தை விட்டு உடனே வெளியேறு
வெட்கம், மானம், சூடு, சொரணையற்ற எடப்பாடி
பின்னால் செல்லும் 62 எம்எல்ஏக்களே பதவியை விட்டு விலகு
கழகத்தைவிட்டு வெளியேறு மக்களை சந்தித்து மீண்டு வா என்றும் அஇஅதிமுக உண்மை தொண்டர்கள் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் என அதில் கூறப்பட்டுள்ளது.
கரூர் போஸ்டர்
அ.தி.மு.க.வை 8 முறை படுதோல்வி பெறச்செய்து
புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நிரந்திர பொதுச்செயலாளர் பதவிக்கு பேராசைப்படும் எடப்பாடியை
கண்டிக்கிறோம்!!!. வெளியேறு! வெளியேறு!
அ.தி.மு.க. சட்ட விதிக்கு முரணாக சமத்துவ பேரியக்கத்தை தனது இயக்கமாக மாற்றிய எடப்பாடியே கட்சியை விட்டு வெளியேறு இப்படிக்கு கரூர் மேற்கு மாவட்ட, மாநகர அ.தி.மு.க. உண்மை தொண்டர்கள் என்று போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது.