ரோபோ சங்கருக்கு என்னாச்சு? லேட்டஸ்ட் போட்டோ பார்த்து ஷாக்கான ரசிகர்கள்- எப்படி இருந்த மனுஷன், இப்படி ஆகிட்டாரே
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது படங்களில் காமெடியனாக கலக்கிக் கொண்டிருக்கும் ரோபோ சங்கர், திடீரென உடல் எடை குறைந்துள்ளதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப் போய் உள்ளனர்.
அசத்தப் போவது யாரு, கலக்கப்போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்து பேமஸ் ஆனவர் ரோபோ சங்கர். இவரின் திறமையை பார்த்து வியந்துபோன சினிமா பிரபலங்கள் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பளித்தனர். அந்த வகையில் தனுஷ் உடன் மாரி, அஜித் உடன் விஸ்வாசம், சிவகார்த்திகேயன் உடன் வேலைக்காரன் என பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து பிரபலமானார் ரோபோ சங்கர்.
இவரது மகள் இந்திரஜாவும் தற்போது சினிமாவில் காமெடி வேடங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். இவர் முதன்முதலில் விஜய்யின் பிகில் படத்தில் பாண்டியம்மா என்கிற கேரக்டரில் நடித்தார். இதையடுத்து கார்த்தி - அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன விருமன் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து இந்திரஜாவுக்கு சினிமாவில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
இதையும் படியுங்கள்... Keerthy Suresh : கிளாமர் குயினாக மாறிய கீர்த்தி சுரேஷ்... தசரா நாயகியின் தாராள கவர்ச்சிக்கு குவியும் லைக்ஸ்
இப்படி தந்தையும், மகளும் சினிமாவில் பிசியாக இருப்பதை போல் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்து வருகின்றனர். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா, அதில் தனது தந்தையுடன் நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் பதிவிட்ட ரீல்ஸ் வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.
அதற்கு காரணம் ரோபோ சங்கரின் தோற்றம் தான். நன்கு கட்டுமாஸ்தான் போல் இருந்த ரோபோ சங்கர் தற்போது உடல் எடை குறைந்து மிகவும் மெலிந்த தோற்றத்துடன் காட்சியளிக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள், அவர் படத்துக்காக உடல் எடையை குறைத்தாரா அல்லது ஏதேனும் உடல்நல பாதிப்பால் அவருக்கு இவ்வாறு உடல் எடை குறைந்துவிட்டதா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ரோபோ சங்கர் மிகவும் ஒல்லியான தோற்றத்துடன் காட்சியளில்லும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... shruti Haasan : நீங்க வெர்ஜினா?... நெட்டிசனின் எடக்குமுடக்கான கேள்விக்கு தரமான பதிலடி கொடுத்த ஸ்ருதிஹாசன்